இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
போப் ஐயர் போற்றிய தமிழ் பல்லாற்றானும் தமிழ்ஒளி பரவத் தொண்டாற்றிய மேல்நாட்டவருள் தனிப் பெருமைக்குரிய பெரியார் ஜி.யு. போப் அவர்கள். அவர்களைத் தமிழறிஞர்கள் போப் ஐயர் என்றே பெருமைப்படுத்துவர். தமிழகத்திற்கு ஆயிரத்து எண்ணூற்று முப்பத்தொன்பதாம் ஆண்டில் வந்த அப் பாதிரியார் இங்கே தங்கிய நாற்பதாண்டு களும் தமிழுக்குத் தொண்டாற்றியது மட்டுமன்றிப் பின்னர் இங்கிலாந்துக்குச் சென்றும் பல ஆண்டுகள் தமிழே மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார்.