56. தமிழ்க்கடல் அலை ஓசை கிறித்தவ சமய அறிவை ஆங்கிலத்தின் வாயிலாகவே மக்களுக்கு விளக்கம் செய்ய முடியும் என்னும் கருத்துடைய பாதிரிமார்களிடையே போப் அவர்கள் மக்களின் தாய் மொழி வாயிலாகவே அதனை விளக்குதல் பயனுடையது என்னும் கருத்தை வலியுறுத்தி வெற்றியும் கண்டார். அவர் தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணங்களைத் தமிழறிஞர்களிடம் கேட்டுத் தெளிந்து வல்லவரும் ஆனார். கொழிக்கும் ஒப்புயர்வற்ற திருக்குறளிலும், வீரம் புறநானூற்றிலும், முத்தமிழ்க் காப்பியமாம் சிலப்பதிகாரத் திலும், புத்த நெறி வீளக்கும் மணிமேகலையிலும், திருவாசகம், திருக்கோவையார் முதலான உள்ளம் நெகிழும் தமிழ்ப் பாடல் களிலும், நன்னெறி, நல்வழி, நீதிநெறி விளக்கம் முதலான ஒழுக்க விளக்க ஏடுகளிலும் அவர் பெருமதிப்புடையவராய்ப் பலகாலும் பயின்றார். பிறரைப் பயிலச் செய்வதையும் தம் கடமையாக மேற்கொண்டார். அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதே மேலை நாட்டவர் அறிந்து பயனுற ஏதுவாகும் என்ற எண்ணத்தோடு அம் முயற்சியில் ஈடுபட்டார். 'இந்தியன் சஞ்சிகை', 'இந்தியாவின் தொல் பொருள் ஆய்வு' முதலான ஏடுகளில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை களை எழுதி வரலானார். புறநானூற்றுப் பாடல்களும்,புறப் பொருள் வெண்பாமாலை திணை விளக்கங்களும் தமிழ்ப்புலவர்கள் வரலாறும் அக் கட்டுரைகளால் ஆங்கிலத்தில் வெளிவந்தன. போப் அவர்கள், உயர்ந்த பண்பாட்டுக்கு வேண்டிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் அறுநூறு செய்யுட்களை நீதி நூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்துத் 'தமிழ்ச் செய்யுட் கலம்பகம்' என்னும் நூலைத் தொகுத்ததோடு, அந்தப் பாக்களுக்கு ஆங்கிலத்திலே விளக்கமும் தந்துள்ளார். 'நாலடியார்' என்னும் நூலினை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்ததோடு அதன் அரிய முன்னுரையில் தமிழர்கள் நெஞ்சில் பதிக்க வேண்டிய அறிவுரையும் கூறியுள்ளார். தமிழர் களுள் பலர் ஆங்கிலத்தில் புலமைபெறப் பெரிதும் முயன்றனரா யினும் தமக்குரியதும் உலகோர் வியப்பதுமான தாய்மொழியின்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/77
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
