பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போப் ஐயர் போற்றிய தமிழ் 57. அருமை உணராது ஒதுக்கி வைக்கும் இயல்பு குறித்து வருந்தி, இத்தகு மொழிபெயர்ப்பு நூல்கள் அவரது கண் திறப்பனவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவ்வாறு தமிழின் தனி வழியான சிந்தனைப் போக்கையும் அதன் உயர்வையும் உணர்ந்து, வடமொழி மாயை - தமிழைச் சூழ்வதற்கு இடனில்லாது கருத்தறிவித்த போப் அவர்கள் நமது கண் திறந்தவர் அல்லரோ ! தென்னாட்டு மொழிகளைப் பற்றிய கட்டுரை ஒன்றில் போப் அவர்கள், "ஒவ்வொரு கோணத்திலிருந்து கோணத்திலிருந்து நோக்கிலும், அளவிடற்கரிய மதிப்பு வாய்ந்தனவாக விளங்குவனவும், பெரிதும் நல்லொழுக்கத்தையும், கடமை ஏடுகள் சான்றாண்மைக் களையும் விவரிப்பனவுமாகவே உள்ள ஏராளமான தமிழிலே உள்ளன. அவை அவர்களது சிந்தனையில் அளவற்ற செல்வாக்கும் கொண்டுள்ளன' என்று புகழ்ந்துரைக்கின்றார். நாலடியார் மொழிபெயர்ப்பு நூலின் முன்னுரையில் டாக்டர் போப் அவர்கள் மொழிவது இது: "திருக்குறள், நாலடியார் போன்ற அருமை வாய்ந்த அற நூல்களைப் படைத்துள்ள தமிழ்மக்களின் பண்பாட்டுச் சிறப்பு எத்துணை உயர்ந்ததாக உளது என்று நான் உன்னியுன்னிப் பலகாலும் வியந்திருக்கின்றேன். அத்தகு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழ்மக்கள், தங்கள் தாய்மொழியைத் தாழ்வாக மதித்து நாணித் தலைகுனியும் போக்கை விட்டொழிவாராக!” டாக்டர் இவ்வாறு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேகூடத் தமிழர்களைத் தன்மதிப்புடையவராக உயர்த்த வேண்டிய நிலை இடைக் காலத்திலே தோன்றியிருந்தது எனில், போப் அவர்களின் பணியால், தமிழ்மொழியுடையார் நிமிர்ந்தனர் என்பது மிகையாமோ? தலை தமிழில் நிலவும் தொன்மை வாய்ந்த இலக்கணங்களும் யாப்பு அமைப்பும் பன்னெடுங் காலமாகத் தமிழ்மொழி வளர்ந்து வந்துள்ளதைக் குறிப்பன என்பதும், மேற்கொள்ளப் பட்ட குறிக்கோளுக்கும் விளக்கும் பொருளுக்கும் ஏற்றபடி