.. 58 தமிழ்க்கடல் அலை ஓசை அமைகின்ற செய்யுள் நடையும் தமிழின் இயற்கை வளர்ச்சி யைக் காட்டுவன என்பதும் போப்பையரின் கருத்தாகும். தமிழர்களிடையே நிலவிய சமய நெறியை மேலை நாட்ட வருக்கு அறிவிக்க விரும்பிச் சிவஞானபோதநூலையும் திருவாசகத் தினையும் அரிய முயற்சியோடு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'சைவசித்தாந்த நெறி திராவிட அறிவின் தேர்ந்து தெளிந்த நிலையின் பயன்' என்று பாராட்டியும் உள்ளார். தத்துவங்கள் பல் வடமொழியிலேயே எழுதப்பட்டிருந்தன வாதலால், யாவும் ஆரியர்களின் அறிவின் பயன் என்று கருதிக் கிடந்த நாட்களில் அவை தமிழரின் அறிவிலே முகிழ்த்தவை என்று தெரிவிக்கப்பட்ட அக் கருத்து, தமிழ்ப் பெருமையை நிலைநிறுத்தத் துணையாயிற்று. பரிதிமாற் கலைஞன் இயற்றிய தனிப்பாசுரத் தொகையின் கவிதைநலம் பாராட்டி அதனையும் மொழி பெயர்த்துள்ளார். 'மனோன்மணீயத்தையும்' சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் இலக்கணத்தை எல்லாரும் எளிதிலே கற்கும் வண்ணம் எளிய உரை நடையில் முதன்முதல் எழுதிய பெருமை அவருக்கே உரியது. இன்றும் பிற மொழியாளர் தமிழ் இலக்கணம் அறிய அவரது நூலே சிறந்த கருவியாக உள்ளது. அவர், உலகம் போற்ற வேண்டிய நூல் திருக்குறள் என்பதை உள்ளங் கொண்டு அதன் முப்பாலையும் முழுவதுமாக மொழி பெயர்த்துள்ளார். தமிழைக் குறித்தும், திருக்குறள் முதலான தமிழ்நெறி விளக்க நூல்களைக் குறித்தும் அவர், வெளியிட்ட கருத்துக்கள் என்றும் நம்மை எழுச்சி கொள்ளச் செய்பவையாம். அவர் கூறுவதைக் கேண்மின்: ‘“ இன்று தமிழர் களுக்கென உரிய தாகியுள்ள இலக்கியம், சில துறைகளில் க ழை நாட்டு இலக்கியங்கள் அனைத்தினும் தனித் தகுதியுடைய தாகும். பிற இந்திய மொழிகளில் உள்ளவாறே சமக்கிர தத்தைத் தழுவியனவாக உள்ள தமிழ்நூல்களைக் கருதியன்று நான் இவ்வாறு கூறுவது. ஆனால், செகப்பிரியரின் நூல்கள்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/79
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
