இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தனித்தமிழ் இயக்கங்கண்ட தகைசால் அடிகள்! இவ்விருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழ்மொழி பிறமொழி ஆதிக்க இருளகற்றி, முகிலைக் கிழித்து முகத்தொளி காட்டும் முழுமதிபோன்று வெளிப்பட்டுத் தோன்றவும் தமிழ் மக்கள் அதன் அருமை பெருமைகளைக் கண்டு தெளிந்து வியந்து ஏத்தவும் பெரிதும் ஏதுவாக நின்ற சிறப்பு, தன்னிக ஏற்ற தமிழ்ப் போறிஞர் மறைமலையடிகளாரையே சாரும். 'தமிழர்கள்' அறிவுநிலை கெட்டுத் தலைதடுமாறிப் போய், தேவபாஷையின் மயக்கிலே சிக்குண்டு குழம்பித் தமிழ்