பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனித்தமிழ் இயக்கங்கண்ட தகைசால் அடிகள் 61 இலக்கியத் தனிநெறியறியாதவராய் இடர்ப்பட்டுக் கிடந்தகாலை அடிகளாரின் திருத்தொண்டு தமிழ்மக்களுக்குப் புத்தொளி காட்டிப் புத்துணர்வு ஊட்டியது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் பிறந்து இந்த விளங்கிய நூற்றாண்டின் இடையாண்டுகாறும் வாழ்ந்து அடிகளார், தமிழ்க்கடல் அலைஓசை எழும் நாகையிலே பிறந்து தமிழ்க் கல்வியொடும் தவழ்ந்து வடமொழியொடும் நடந்து, ஆங்கிலத்தோடும் தலை நிமிர்ந்தவராய் மும்மொழிவல்லுநராய், முறையான ஆராய்ச்சியில் சிறந்தவராய் உறுதியான கொள்கை களைக் கண்டவராய், மாறுபாடு எழுதல் கண்டு கலங்காத தெளிவினராய் விளங்கியவராவார். தமிழ் மொழியின் தனிமூலத் தொன்மையினைச் சான்று களுடன் நிலைநிறுத்தி, தமிழ் இலக்கியங்களின் பண்பாட்டு மேன்மையைப் புலப்படுத்தித் தமிழ் இலக்கணத்தின் தனித் திறத்தை விளக்கிக் காட்டித் திக்கற்ற தமிழ்மக்கள் மொழித் துறையின் கரை அடைதற்குச் சேரவேண்டிய திக்கினை உணர்த்தும் 'கலங்கரை விளக்கம்' ஆக ஒளிர்ந்தார். க அவரது இளமைக் காலத்தே மேல்நிலைத் தமிழர்தம் எண்ணமே வடமொழி வழியால் இயங்கி, பேச்சும் எழுத்தும் அவ்வண்ணமே ஆகிநின்றன. 67607 தமிழர்கள் தம்மைச் சூத்திரர், வைசியர், சத்திரியர் முதலான வருணத்தார் எனக் கொண்டு, சாதி தருமத்தையே சர்வேசுவரன் ஆக்கினை நம்பி, வருணாசிரம மநுதரும சாத்திரங்களை ஏற்று, வேத ஆகம புராணங்களையே கதிமோட்ச மாகக் கொண்டு, பிராமணர்களையே பூதேவர்களாகப் போற்றி, புரோகிதம் பஞ்சாங்கம் ஆகிய சடங்குகளிலே மூழ்கி, வேதியர் நடத்தும் கோயில் கும்பாபிஷேக அருச்சனை பூஜை நைவேத்தி யங்களிலே மெய்மறந்து, பூர்வோத்திரகன்மங்களைப் போக்கு வதிலும் ஜென்ம சாபல்யம் எய்தி மோக்ஷத்தைத் தேடுவதிலும் ஈடுபட்டிருந்தனர். கு 'ஸ்ரீ ராம ஜெயம்' என்பதுடன் தொடங்கி, 'விவாக சுப முகூர்த்தப் பத்திரிகை' எனத் தலைப்பிட்டு, காசிவிசுவ.நாதன்