பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனித்தமிழ் இயக்கங்கண்ட தகைசால் அடிகள் தமிழர்தம் கூட்டங்களில் நிகழ்ந்த உரைகளிலே, திருவாளர்- ஸ்ரீமான் ஆகி, அவைத்தலைவர்-அக்கிராசனாதிபதி ஆகி, அவையோர்- சபையோர் ஆகி, வணக்கம் - நமஸ்காரம் ஆகி, சொற்பொழிவு-உபன்னியாசம் ஆகி, இறைவணக்கம்-ஸ்தோத்திரம் ஆகி, நாட்டுப்பாடல் - தேசியகீதம் ஆகி, நன்றியுரை - வந்தனோபசாரம் ஆகி, இசை - சங்கீதம் ஆகி, பண் - ராகம் ஆகி, நாயனம் - நாதஸ்வரம் ஆகி, தமிழ் மேடையே சமக்கிருதப் பாடையாக மாறிக் கிடந்தது. 63 "தாம் மேல்சாதி" என்னும் நினைவினர் தம் உரை யாடலிலோ, நீர்- ஜலம் எனவும் குடிநீர் - தீர்த்தம் எனவும் குளியல் - ஸ்நானம் எனவும் சோறு- சாதம் எனவும் குழம்பு-சாம்பார் எனவும் சுவைநீர்-ரசம் எனவும் உணவு - போஜனம் எனவும் தின்பண்டம்-பக்ஷணம் எனவும் பாண்டம்-பாத்திரம் எனவும் உப்பு - லவணம் எனவும் வரிசை-பந்தி எனவும் வழங்கித் தமிழையே ஒழித்து வந்தனர்.