64 தமிழ்க்கடல் அலை ஓசை பள்ளி மாணவர் தம் தமிழ்ப் பாடங்களிலேயே, பூ-புஷ்பம் ஆகவும் மாலை-ஹாரம் ஆகவும் பூப்பலி-பூஜை ஆகவும் விளக்கு-தீபம் ஆகவும் பறவை பக்ஷி ஆகவும் பாம்பு - சர்ப்பம் ஆகவும் தீண்டிக் கொண்டிருந்தன. தமிழ் உரை நடையிலே நன்மை - க்ஷேமம் ஆகி, நலம்- சௌக்கியம் ஆகி, மகிழ்ச்சி -- சந்தோஷம் ஆகி, உடல் நலம் திரேக ஆரோக்கியம் ஆகி, தோள்வலி - புஜபலாக்கிரமம் ஆகி, அறிவாற்றல் -புத்திசாலித்தனம் ஆகி, இளைப்பாறுதல்-சிரமபரிகாரம் ஆகி, காட்சியின்பம் - நேத்திரானந்தம் ஆகி, இறையருள் - ஈசுவர கடாட்சம் ஆகி, குடமுழுக்கு-கும்பாபிஷேகம் ஆகி, பிறவிப்பயன் - ஜென்மசாபல்யம் ஆகி, அறம் பொருள் இன்பம்- தர்மார்த்த காமம் ஆகி, வீடுபேறு - மோக்ஷசித்தி ஆகி, உயிர்த்துன்பம்—ப்ராண அவஸ்தையாகி தமிழையே திக்குமுக்காட வைத்தன. அன்னையும் தந்தையும் - மாதாபிதா ஆகி, மகனும் மகளும் --புத்திரன் புத்திரி ஆகி, ஆணும் பெண்ணும்-புருஷனும் ஸ்திரியும் ஆகி,
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/85
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
