தனித்தமிழ் இயக்கங்கண்ட தகைசால் அடிகள் கணவன் மனைவி- பதியும் பாரியாளும் ஆகி, இல்லறம் -- கிருகஸ்தம் ஆகி, துறவறம்- சன்னியாசம் ஆகித் தமிழ்மொழியே காட்டுமொழியாக மாறிக் கிடந்தது. அன்பு குறைந்த ப்ரீதியும் (பிரியமும்) அமைதி குலைத்த சாந்தியும் நட்பு கெடுத்த சிநேகமும் பகை மறைக்கும் விரோ தமும் அறிவு தாழ்த்தும் புத்தியும் குறும்பு தளர்த்தும் சேஷ்டையும் நாணம் விலக்கும் சங்கோசமும் வாய்ப்பு தவிர்க்கும் அதிர்ஷ்டமும் இழப்பு ஓட்டிடும் நஷ்டமும் விருப்பம் மாற்றிடும் இஷ்டமும் முழக்கம் குன்றிடும் கோஷமும் வஞ்சினம் கொன்றிடும் க்ஷத்திரமும் நினைவு இழப்பிக்கும் ஞாபகமும் கலைப்பிக்கும் சொப்பனமும் மறைக்கும் தோஷமும் 65 கனவு குற்றம் தமிழ்ச் சொற்களே என்று எண்ணி மயங்குமாறு விரவின. நாழி நேராகி, பொழுது முகூர்த்தமாகி, வேளை சமய மாகி, நாள் திதி (திகதி) யாகி, கிழமை வாரமாகி, திங்கள் மாதமாகி, ஆண்டு வருஷமாகி, ஆண்டுக் கணக்கிடுதல் பிரபவ, விபவ முதலான அறுபதாண்டுச் சுழற்சியில் சிக்கிக் கால ஓட்டம் தடுமாறிப் போயிற்று. ஞாயிறு சூரியனாகி ஆதித்தனுமானான். திங்கள் சந்திரனாகி சோமனுமாயிற்று. பிற கிழமைப் பெயர்களும் மாறி வழங்க வாயின. உடுக்களும் விண்மீன்களும் - கிரகங்களும் நட்சத்திரங் 5
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/86
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
