66 தமிழ்க்கடல் அலை ஓசை களும் ஆயின. உவா நாளும் முழுமதி நாளும் - அமாவாசையும் பௌர்ணமியும் ஆயின. இந்த வடமொழிச் சொற்கள் வழங்கப்படுவதே தமிழுக்கு அழகு எனத் தவறாக எண்ணப்பட்டது அக் காலத்தில். தமிழ் பிறந்த நாள் முதல் உலகையும் உயிர்களையும் படைத்து அளித்துக் காத்து அழித்துவரும் கடவுளே, இக்காலத்தில் ஈசுவரனாகி லோகங்களையும் ஜீவன்களையும் சிருஷ்டி செய்து, ரக்ஷித்து, சம்ஹரித்து வருகின்றான் எனப்படின் - இந்த வட மொழி புகுத்தப்பட்டதால் விளைந்த கோலத்துக்கு வேறென்ன விளக்கம் வேண்டும்? இத்தகு பிறமொழிக் கலப்பின் விளைவைப் பல்லாண்டு களாகத் தொடர்ந்து பல்லாற்றானும் ஆராய்ந்து வந்தார் அடிகளார். இற்றைக்கு ஐம்பது ஆண்டுகட்கு முன்னர் ஒரு நாள் அவருடைய அருமை மகள் நீலாம்பிகையார் வடலூர் வள்ளலார் இராமலிங்கம் அருளிச் செய்த திருவருட் பாவினின்றும் கீழ்வரும் பாடலைப் பாடிக் கொண்டிருந்தனர். "பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளையைப் பெறுந் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் கற்ற நெஞ்சகங் கலைமறந் தாலும் கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே" என்னும் அப் பாடலைக் கேட்டு மகிழ்ந்த அடிகளார், இப் பாட்டில் வரும் 'தேகம்' என்னும் வடசொல்லை நீக்கி, 'யாக்கை' என்னும் தமிழ்ச் சொல்லைப் பெய்து இசைத்தால், அச் செய்யுள் ஓசை இன்பம் மேலும் மிகுவது அன்றோ என்றார். தமிழறிவு சான்ற மகளாரும் அவ்வாறே ஆவதைப் பாடி உணர்ந்தனர். அதனைத் தொடர்ந்து அடிகளார், பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழ் தன் இனிமை குன்றுகிறது. நாளடைவில்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/87
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
