பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனித்தமிழ் இயக்கங்கண்ட தகைசால் அடிகள் 67 அவ் வேற்றுமொழிச் சொற்கள் நிலைபெறுதலின் முன்னர் அவற்றுக்கு ஈடாகவும் மேலாகவும் வழங்கி வந்த அரிய தமிழ்ச் சொற்கள் பல வழக்கின்றி மறைகின்றன. இந்நிலை நீடிப்பின், அதன் விளைவுகள் எண்ணத்தான் கூடுமோ என்றனர். அது கேட்ட நீலாம்பிகையார், அவ்வாறு கேட்டினைத்தரும் வேற்றுமொழிச் சொற்களை அறவே நீக்கித் தனித் தமிழிலேயே பேசவும் எழுதவும் முற்பட்டு அதனைக் கைவிடாது தொடரவும் வேண்டும்' என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தனர். அந்த உரையாடலின் பயனாக, அதுகாறும் தம் பெயராக விளங்கி நின்ற 'சுவாமி வேதாசலம்' என்னும் பெயரை அன்றே "மறைமலையடிகள்' என மொழிபெயர்த்து வழங்க முற்பட்டார் அடிகள். அவர் வெளியிட்டு வந்த 'ஞானசாகரம்' என்னும் திங்கள் வெளியீட்டை 'அறிவுக்கடல்' எனவும் தாம் நிறுவி யிருந்த சமரச சன்மார்க்க நிலையத்தைப் 'பொது நிலைக்கழகம்' எனவும் மொழிமாற்றி அமைத்தார். அடிகளாரும் அவருடைய மகளாரும் தமிழோடு சைவத் திலும் ஆழ்ந்த பற்றுடையவரே எனினும் நீலாம்பிகையார், தம் தம்பியர் நால்வரும் பூண்டிருந்த நால்வர் பெயரினும் திருநாவுக்கரசு தவிர்த்து மற்ற மூன்றும் மொழிக் கலப்பாக இருந்தமை கண்டு அவர்தம் பெயரையும் தம் தங்கை பெயரை யும் மாற்றி அழைப்பாராயினர். திருஞானசம்பந்தரை 'அறிவுத் தொடர்பு எனவும், மாணிக்கவாசகத்தை 'மணிமொழி' எனவும், சுந்தரமூர்த்தியை 'அழகுரு' எனவும், திரிபுரசுந்தரியை 'முந்நகரழகி' எனவும் அழைப்பதிலே பெருமை கொண்டனர். இவ்வாறு அடிகளாரும் அவருடைய குடும்பத்தாரும் தமிழ் தாங்கி நின்றனர். அடிகளாரும் நீலாம்பிகையும் வெளியிட்ட கட்டுரைகளும் நூல்களும் தனித்தமிழ் ஏடுகளாகவே மலர்ந்தன. 'தனித்தமிழ்க் கட்டுரை என்னும் நூலையும் முதன்முதலாக அம்மையார் இயற்றி வெளியிட்டார். அடிகளார் அதுகாறும் இயற்றி வெளியிட்டிருந்த நூல்களிலே விரவிநின்ற தாம்