68 தமிழ்க்கடல் அலை ஓசை பிறமொழிச் சொற்களை யெல்லாம் அறவே விலக்கித் தனித் தமிழ்ச் சொற்களைப் பெய்து மறுவெளியீடு செய்வாராயினர். இவ்வாறு தமிழுக்கு இழைக்கப்பட்ட தீங்கினைக் களைய அடிகளாரும் அவர் மகளாரும் கொண்ட உறுதியும் செயல் முறைத் துணியுமே தனித்தமிழ் இயக்கமாக அரும்பி, மலர்ந்து இன்று மணம் பரப்பி நிற்பதாகும். அடிகளார் கண்ட முடிபும் முறையும் தவறு எனச் சிலர் மாறுபட்டு நின்றகாலையும் அவர் மேலும் மேலும் தம் கொள்கையை நிலைநிறுத்துவதற்கான சான்றுகளையே எடுத்து எழுதிவரலானார். 'சிந்தனைக் கட்டுரைகள்' என்னும் என்னும் அவரது ஆங்கில முன்னுரையிற் காணப்படுவது இது : நூவின் ர். "தமிழிலே வடசொற்களும் தொடர்களும் ஆங்கிலச் சொற் களும் பிறவும் கலந்து வழங்குவதன் மூலமே தமிழ்மொழி, கருத்துவளம் பெற்றுக் காலத்திற்கு வேண்டிய வலிவோடு திகழும் எனச் சில தமிழ்ப் புலவர்களும் கூறி வருகின்றனர் உண்மையாகவே அது தமிழை வளப்படுத்துவதாகுமெனில் இந்தக் கருத்தை யாரும் வரவேற்பர். ஆனால் அது தமிழை வளப்படுத்துவதற்கு மாறாகத் தன் சொல்வளத்தை இழக்கச் செய்து வறியதாகவே ஆக்குகிறது" என்று தெளிவுறுத்திய அடிகளார், அன்றாட வாழ்வில் இல்லங்கடோறும் வழங்கிவந்த தனித்தமிழ்ச் சொற்களையும் அவற்றின் இடத்தை நிரப்பி - அச் சொற்கள் நாளடைவில் மறைய வழிசெய்து வரும் வடமொழிச் சொற்களையும் எடுத்துக் காட்டுகிறார் ஒரு பட்டியலாக. அது இது : தமிழ்ச்சொற்கள் நிலம் நீர் நெருப்பு காற்று - வடசொற்கள் தமிழ்ச்சொற்கள் வடசொற்கள் பூமி வானம் 1 ஜலம் உணவு அக்கிளி ஒளி - ஆகாசம் அன்னம் பிரகாசா - வாயு பகல் சூர்யா
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/89
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
