பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தமிழ்க்கடல் அலை ஓசை ளெல்லாம் கி.பி. 11 அல்லது 12வது நூற்றாண்டிலே தாம் இயற்றப்பட்டனவென்றுங் கூறினார். இவர் கூற்றுகளெல்லாம் நியாயவாராய்ச்சி யின்றிக் கூறப்பட்டனவாகலின் அவற்றின் ஈண்டறிவித்தல் வேண்டற்பாலதொன்றே யாம் என்று தொடங்கினார் அடிகளார். பொய்ம்மையை 21 "ஒருமொழி பிறிதொரு மொழியோடு இனமுடைத்தோ அன்றோ என்று அறிதல், அம்மொழிகள் முதன் முதல் தோன்றுங்கால் பிறந்த சொற்களை வைத்து ஒத்து நோக்கும் முறையான் மட்டுமே பெறப்படுவதாம். அவ்வாறு பிறந்த தமிழ்ச் சொற்கள் நான், நாம்; நீ, நீர்; அவன், அவள், அவர்; அது, அவை; என்பனவாம். வடமொழியில் வழங்கும் இம் மூவிடப் பெயர்கள் தமிழோடு சிறிதும் ஒற்றுமை எய்தாமையால் அவை வேறுவேறாதல் (தனித்தனித் தோற்றமுடைய சொல் லா தல்) தெற்றெனத் துணியப்படும். தமிழர் தமக்கு உறவினராவாரை அம்மை, அப்பன், பிள்ளை, துணைவன், மனைவி, அண்ணன், தம்பி, அக்கை, தங்கை என வழங்குவர். ஆரியர் அவரையெல்லாம் மாதா, பிதா, சுத அல்லது பால, பதி, பார்யா, அக்ரஜா, ப்ரதா, ஸ்வஸா எனப் பெயரிட்டு (வடமொழியில்) வழங்குவர். இம் முறைப் பெயர்களும் தம்மோடு இனப்படுதலில்லாமையால் இவையும் வேறு வேறு என்பது துணிக.' 66 "இன்னும் இவ்வாறே உணவுப்பெயர், எண்ணுப்பெயர், காலப்பெயர், இடப்பெயர், பூதப்பெயர், விலங்கின்பெயர், உறுப்புப்பெயர், வினைப்பெயர் முதலியனவும் இவ்விருமொழி களிலும் வேறுபடுதல் காண்க. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளுவு, குறும்பு, எர்க்கலா, ஏனாதி முதலான மொழிகட் கெல்லாம் இப் பத்துவகைச் சொற்களும் பொதுப்பட நிற்றல் கண்கூடாய் அறியக் கிடத்தலின் இவ்வொன்பது மொழிகளும் ஒன்றோடொன்று இனப்பட்ட (தமிழ்க் குடும்ப- திராவிட மொழிகள்) ஒரு தொகுதியாமென்பது உணரப்படும். 'இனி ஆரியரும் தமிழரும் பிற்றைஞான்று மிக நெருங்கி மருவி வாழ்ந்தனராகலின் ஆரிய மொழிக்குரிய சொற்கள்