தனித்தமிழ் இயக்கங்கண்ட தகைசால் அடிகள் 71 தமிழினும், தமிழுக்குரிய சொற்கள் ஆரியத்தினுங் கலப்புற்றன. அவர் அங்ஙனம் நெருங்கியிராது வேறாயிருந்த காலத்தே எழுதப்பட்ட (பழந்தமிழ்) நூல்களில் விரவிய சொல்வழக்கு (ஆரியச் சொற்கள்) காணப்படுதல் சிறிதும் இல்லை என்க. 'சங்கச் செந்தமிழ் நூல்களில் நூற்றுக்கு ஒன்று அல்லது இரண்டு விழுக்காடு (ஆரியச் சொற்கள்) மிக அருகி வந்தனவே யன்றிப் பிற்றை ஞான்றை நூல்களிற் போலப் பெருகிய வரவினவாய் அவை வந்தனவல்ல வென்க. $1 'இனி ஆணி- அடவி - கடு- கலா - குடி-கு ண்டம்- கூனி குளம் - கோட்டை - சவம்- சாயா- பட்டினம் - பாகம் மீனம் - வளையம் - நாரங்கம் - முகம் முதலான செந்தமிழ்ச் சொற்கள் ஆரிய மொழியில் வழங்குதல் உய்த்துணரற்பால தென்க இவ்வாறு சான்றுகள் தந்து தமிழின் தனிப்பிறப்பை நிறுவினார் அடிகள். மேலும் தமிழ் தனி மொழியாயினும் அஃது ஆரியம்போல் அத்துணைப் பழைமை உடையதன்று, நிரம்பவும் புதிதாய்த் தோன்றிய தொன்றாம் என்றுரைப்பார் உரை பொருந்தாமையை யும் அவர் விளக்கியுள்ளார். "தமிழில் ஒரு பொருளை உணர்த்துதற்குப் பல சொற்கள் நிற்றல், பிங்கலந்தை முதலான நிகண்டுநூல் கற்ற சிறுமகாரும் நன்குணர்வர். எடுத்துக் காட்டுமிடத்து, குணத்தினை உணர்த்த 21 சொற்களும் உயர்வினை உணர்த்த 17 சொற்களும் வலிவினை உணர்த்த 34 சொற்களும் அச்சத்தினை உணர்த்த 19 சொற்களும் மலையினை உணர்த்த 28 சொற்களும் (தமிழில்) வருகின்றன. ஒரே காலத்து இச் சொற்களெல்லாம் ஒருங்கு பிறந்தனவாகா. ஒவ்வோர் சொல்லும் ஒவ்வோர்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/92
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
