பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தமிழ்க்கடல் அலை ஓசை காலத்துத் தோன்றி அவ்வக்காலத்திருந்த அறிவுடையோரால் நூல்களில் கன்மேல் எழுத்துப்போல் அச் எழுதப்பட்ட சொற்கள் நிலைபெற்றுள்ளன. அவ்வாறு வழங்கியனவும் பின்னர் உலக வழக்கிற் கேற்பப் புதுச் சொற்கள் பிறக்குமிடத்து அவற்றிற்கு இடனளித்து உலக வழக்கில் வீழ்ந்து பட்டன வாயின. அச் சொற்கள் எல்லாவற்றையும் பழைய தமிழ் நூல்களில் ஆய்ந்து பொறுக்கி எவ்வெச்சொல் எவ்வெக்காலத்து நூலில் தோன்றிற்றென்று கணிப்பின் தமிழ்மொழியின் காலம் இனிது நாட்டப்படும். ஒரு பொருளைச் சுட்டுதற்குப் பல சொற்கள் காணப்படும். அத் துணையே பற்றித் தமிழ்மொழி மிகப் பழைய மொழியா மென்று கூறுதல் குற்றம் ஆமாறில்லை என்க. து இனி, சொல் வழக்கானேயன்றிச் சொல் உச்சரிப்பு முறை யானுந் தமிழ் மிகப் பழையதொன்றாதலை விளக்கிக் காட்டி யுள்ளார். தமிழில் வழங்கும் எல்லாச் சொற்களின் முதலினும் ட், ண்,ர்,ல், ழ், ள், ற், ன் என்னும் எட்டு (மெய்) எழுத் துகள் நில்லாவென இலக்கண நூல்களில் ஒரு விதி காணப் படும்.அவை (அவ்வெட்டெழுத்துகள்) நா மேலண்ணத்தைச் சென்று தொடும் முயற்சியால் பிறப்பன. நாவை மேலே சேர்த்து உச்சரிக்கும் அம் முயற்சி பிள்ளைப் பருவத்தே தோன்றாமையின் (இயலாமையின்) அப் பருவத்தே பிறக்கும் சொற்களெல்லாம் (டமாரம் - ரம்பம் - லட்டு போன்றவை) - முதலில் அவ்வெழுத்துக்களை உடையனவாகா. படைப்புத் தொடக்கத்தில் தோன்றிய மக்களது நிலைமையும் பிள்ளைப் பருவத்தோடியைந்ததாகலின் அஞ்ஞான்று அவர் பிறப்பித்த சொற்களிலே (முதலில்) அவ் வெழுத்துகள் வாயின. இதனால் தமிழ்மொழி மக்களுடைய முதற் பருவத்தில் தோன்றியதென்பது எளிதிற் பெறப்பட்டது." காணப்படா வடமொழி முதலான மற்றை மொழிச் சொற்களின் முதலிலெல்லாம் அவ் வெழுத்துகள் நிற்றல் அறியப்படுதலின்