தனித்தமிழ் இயக்கங்கண்ட தகைசால் அடிகள் 73 அவை மக்களுடைய பிற்பருவத்திலே தோன்றியவாமென்பது துணிபொருள், ' மேலும் இப்போது நூல் வழக்காயுள்ள வடமொழி மக்களால் எஞ்ஞான்றும் பேசப்பட்டதில்லை யென்றும், இதற்குத் தாய்மொழியான ஆரியமே (அஃது எழுத்து வடிவம் பெறாதது) அங்ஙனம் பேசப்பட்டதொன்றாம் என்றும் அம் மொழியாராய்ச்சிவல்ல பண்டிதர்கள் பலரும் நின்றனர். இவ்வாற்றால், மக்களுடைய முற்பருவத்திலே பிறந்த தமிழ்மொழி, அவருடைய பிற்பருவத்திலே தோன்றிய (தோற்றுவிக்கப் பட்ட) வடமொழிக்கும் முற்பட்டதொன்றாதல் முடிந்த உண்மையாம். உரையா இவ்வளவேயன்றித் தமிழ், இலக்கண இலக்கிய விரிவாலும் மிகப் பழையதொன்று என்பதை அடிகளார் விளக்கினார். தமிழ் நாட்டில் பண்டைக் காலத்துக் கற்றறிவுடைய சான்றோர் கணக்கின்றி யிருந்தனர் என்பதன்றி அவர்களால் திருவாய் மலர்ந்தருளப்பட்ட அளவிறந்த நூல்களும் பாட்டு களுமே சான்றாம் இற்றைக்கு 2000 ஆண்டுகளின் முன்னே நமது செந்தமிழ் மொழி எவ்வளவு திருத்தமாக வழங்கப்பட் டுலாவியது.அக் காலத்தில் எழுதப்பட்ட தெய்வத் திருக்குற ளுக்கு இணையான நூல் இவ்வுலகில் உண்டோ? அஃது உயர்வு ஒப்பில்லா உவரா அமிழ்தமன்றே! முழுக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை என்பவற்றின்முன் தலையெடுத்து நிற்கும் வேறு காப்பியங்கள் இவ்வுலகில் எந்த மொழியிலேனும் உளவா? இல்லையே! மக்கள் மெய்யுணர்வின் இயற்கையினைப் பகுத்து விளக்கிய றையனா ரகப்பொருள் உரை போன்ற நூல் இவ் விரிகடலுலகினும் இல்லையே! கலித்தொகையில் உள்ள இயற்கைப் பொருள் நுட்பமும் பலதிறப்பட்ட மக்கள் வழக்க ஒழுக்க ஆராய்ச்சியும் வேறு எம் மொழி நூலிலாயினும் உள்ளனவா? மனு முதலிய (வடமொழி) அறநூல்கள் எல்லாம் தாலடியாரை ஒக்குமா ? உ "இந் நூல்கட்கெல்லாம் மிக முற்பட்ட தொல்காப்பிய நூற் பெருமையைச் சிறிது ஆராய்ந்திடுவோமாயின், தமிழர்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/94
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
