பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழ்க்கடல் அலை ஓசை வரலாற்றுக் காலத்திற்கு முன்னும் மிக்க நாகரிகம் பெற்று வாழ்ந்தாரெனல் தெற்றென விளங்குகின்றது. இது வடமொழியிற் பாணினிமுனிவர் இயற்றிய "அட்டாத்தியாயி" என்னும் அரிய பெரிய இலக்கண நூலுக்கு முந்தியது.' இவ்வாறு சான்றுகள் தந்து விளக்கிய அடிகளார், பாணினிக்கு நானூறு ஆண்டுகளின் முன்னே ஆசிரியர் தொல்காப்பியனார் இருந்தார் என்று கொண்டு, இற்றைக்கு 3200 ஆண்டுகட்கு முன் தொல்காப்பியர் காலம் கணிக்கப்படும் என்று முடிவு கூறுகிறார். மேலும் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தின் முதலிலேயே அவ்வாசிரியர், தமிழ் ஒலி எழுத்துகளை முறையே நிறுத்திக் கூறிய திறத்தை வியந்து ஏத்தும் அடிகள் இவ்வெழுத்துமுறை, வடமொழி முதலான பிறமொழிகளிலும் காணப்படுவதாயினும் இது தமிழுக்கே உரியதென்பதனை ஆராய்ந்து காட்டுகிறார். "ஆரியர் இந்தியாவிற் புகுமுன்னே அம்முறை அறிந்தா ரில்லை. ஏனைஆரிய சாதியார் வழங்கிய இலத்தீன், கிரீக்கு, டியூடானிக், சிலாவிக் முதலிய ஆரிய மொழிகளிலெல்லாம் எழுத்துகள் --உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துகள் ஒரு முறையுமின்றிப் பலவாறு மயங்கிக் கிடக்கின்றன.[இதனால்] அவ்வாரியர் இந்தியாவிற் புகுந்தபின் தமக்கு முன்னே அங்கு வாழ்ந்துவரும் தமிழர் கண்ட அவ்வெழுத்து முறையையே எடுத்தாண்டு கொண்டார் என்பது தெளிவாம்' ஆரியரோ தம்பாற் பிறந்த ஓசைகளை எழுத்திலிட்டுக் காட்டும் வகை அறியாமையினால், தம் முன்னோராற் பாடப்பட்ட பாட்டுகளை நெட்டுருப் பண்ணுதற்குக் கிடைகூட்டிப் பயின்று: வந்தார். அவ் வழக்கம், இன்றும் ஒருங்கு கூடியிருந்து வேதம் ஓதுமாற்றால் நன்கறியப்படும். அதனாலன்றே அவை (வேதம்) "எழுதாக்கிளவி' என்று பெயர் பெறுவனவாயின. "மேலும் வடமொழிக்கென்றே ஓரெழுத்து இல்லாமை யினாலேதான், வடநாடுகளிலுள்ளோர், மகாராட்டிரத்துக்குரிய தேவநாகர எழுத்திலும், தென்னாடுகளிலுள்ளோர் தமிழுக்குரிய