பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரந்த தனித்தமிழ் இயக்கங்கண்ட தகைசால் அடிகள் 75, எழுத்துகளாலும், ஆந்திர நாட்டிலுள்ளோர் தெலுங்கு எழுத்துகளாலும், வடநூல்களை எழுதுதலும் பதிப் பித்தலும் செய்துவருகின்றனர்" "பண்டைநாள் ஆரியர் எழுத்தறியாமையின் தம்முடைய பழைய நூல்களைப் பாதுகாத்து (ஓசையுடன்) வழங்கற் பொருட்டுத் திருத்தமாக அவற்றை ஓதுதற்குரிய முறைகளை யெல்லாம் பிராதிசாக்கியங்களில் மிக விரித்தெழுதினார். எழுத்தறிந்திருந்தனராயின் (பின்னாட்களில்) அவ்வாறு விரித் தெழுதல் வேண்டப்படாதென்க" "நிளைக்கப்படுவது என்னும் பொருளையுடைய 'ஸ்மிருதி' என்னும் சொல்லும், கேட்கப்படுவது என்னும் பொருளை யுடைய 'சுருதி' என்னும் சொல்லும், அவ் வடநூல்களுக்குப் பெயராய் அமைந்ததனை உற்று நோக்குமிடத்து அவை நினைக்கப்பட்டும் கேட்கப்பட்டும் வந்தனவேயல்லாது எழுத்தி விட்டு எழுதப்படவில்லை என்பது போதரும்" இவ்வாறு, ஆரியர் தம் மொழிக்கென ஓர் எழுத்து முறையையும் தனியே பெறாதிருந்து தமிழ் மொழியின் எழுத்து முறை கண்டே அமைத்துக் கொண்டவராவர் என அடிகளார் காட்டிய சான்றுகள் தமிழின் தனிச் சிறப்பை நாட்டவருக்கு அறிவுறுத்துவதாம். சொல்லால் தொன்மையும் எழுத்தால் முதன்மையும் ஒலி உச்சரிப்பு முறையால் மேன்மையும் உடையது தமிழே எனக் காட்டிய அடிகளார், உலகியல் பொருள் (அறியும்) பாகுபாட்டிலும் தமிழே செம்மையுடையது எனக் காட்டினார். உயர்திணையும் அஃறிணையும் ஆண்பாலும் பெண்பாலும் பிறவும் தமிழிலேயே பொருளுடைய பாகுபாடாக விளங்குவன. ஆனால் வடமொழியிலுள்ள சொற்பொருட் பாகுபாடுகள் நுண்ணறிவிற்குச் சிறிதும் இயையா. வடமொழியில் கோயில் என்னும் சொல் ஆண்பால், சாலை- என்னும் சொல் பெண்பால் எனப் பகுக்கப்படுகிறது. விருப்பம் என்னும் பொருள் தரும் சொற்களில் 'இச்சா'-பெண்பால். 'மநோரத'-- ஆண்பால்.