76 தமிழ்க்கடல் அலை ஓசை உலகம் என்னும் பல பொருள் தரும் சொற்களுள் ஜகதோ - பெண்பால்; லோக - ஆண்பால். இவை போன்று வருவன மிகப்பல. இவற்றைக் காட்டிச் சடப்பொருளான இவையெல்லாம், ஆண் பெண் எனக் கூறினால் யாருக்குத்தான் நகை விளையாது? என வினவுகிறார் அடிகள். "ஆனால் இற்றைக்கு 4000 ஆண்டுகளின் முன்னரே தமிழ் இலக்கண ஆசிரியர், உயர்திணை அஃறிணை - ஆண் பெண் - பாகுபாட்டினை இயற்கைநெறி திறம்பாதே உணர்ந்து, அறிவுடையார் எல்லார்க்கும் ஒப்ப விளக்கிய நுண்ணறி வாற்றல், பெரிதும் போற்றற் பாலதாம். பண்டைத் தமிழ் நூல்களிற் சொல்லப்பட்ட ஒவ்வொரு பொருளும் கிடைத்தற் கரிய முழு மாணிக்கங்களாம்! இவ்வரும் பெரும் மாணிக்கங்க னெல்லாம் வரன் முறையே தொகுத்த தொல்காப்பியம் விலை வரம்பறியாக் களஞ்சியமாம் ! என்று முழங்குகிறார் அடிகள். மேலும் தொல்காப்பிய ஆசிரியர் பொருளதிகாரத்தில், செய்யுட் பொருளை (எண்ணங்களை) அகம் - புறம் எனப் பகுத்த முறை யின் அருமையை வியந்து, அதன் தனித்த வழியை விளக்கித் தமிழின் உயர்வை நிலைநாட்டுகிறார். தமிழுக்குரிய தெளிந்த கடவுட் கொள்கையோடு வேதங் களிற் போந்த பல தேவர் வழிபாட்டை ஒப்பிட்டுக் காட்டுகிறார் அடிகள். மதுக்களிப்பை விளைத்து அறிவை மயக்கி மழுக்கும் சோமரசபானத்தைச் சிறப்பித்துப் புகழ்ந்த இருக்குவேதபதிகம் ஒன்றினை மொழி பெயர்த்துக் கூறி - அப்பெற்றித்தாய பதிகங் களே இருக்குவேத முழுவதும் நிரம்பிக் கிடப்பன என்று அறிவித்து அதன் தகுதியை உணர்த்துகின்றார். மேலும், "இவ்வாறு வேதத்தின் உண்மைகூறி மாந்தர்க்கு அறிவு கொளுத்த வருவாரைக் கண்டு மனம் புழுங்குவோர் சிலர், 'அவைதிகர்' எனப் புறம் பழிப்பர்; அவர் கூறும் அப்புறப் பழிப்புரைக்குச் சிறிதும் அஞ்சன்மின் !..... நமக்கும், மற்றும் அறிவுடையார் எல்லார்க்குஞ் சிறந்த பிரமாண மெய்நூல்களா யுள்ள தொல்காப்பியம் - திருக்குறள் முதலியனவே நமக்குச் சாலுமென்று மனந்திருந்துமின்கள்! பிறர் கூறும் பகட்டுரைக்கு
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/97
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
