இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தனித்தமிழ் இயக்கங்கண்ட தகைசால் அடிகள் 7T அஞ்சி உண்மையைக் கைவிட்டு விடாதீர்கள்!' என அடிகளார் அறிவுறுத்தி எச்சரிக்கின்றார். இவ்வாறு தமிழின் தனிமை-தொன்மை-முதன்மை- நன்மை - செம்மை - முழுமை- இறைமை ஆகிய அனைத்தை யும் தக்க சான்றுகளுடன் விளக்கி யுரைத்து வடமொழியினும், அம் மொழியின் உச்சி எனக் கொள்ளப்படும் வேதசாஸ்திர புராணங்களினும், அம்மொழியிற் பிறந்த இலக்கண இலக்கியங் களினும், தமிழும் தமிழில் பிறந்த இலக்கண இலக்கியச் சிந்தனைகளுமே ஈடு இணையற்ற பெருமையுடையவை என்று நாடறிய முழங்கி, ஏடுநிரம்ப எழுதி, தலைகவிழ்ந்து கிடந்த. தமிழ்மக்களைத் தலைநிமிரச் செய்யுமாறு தமிழ்த் தொண்டு ஆற்றிய அடிகளாரின் திருத்தொண்டாம் தமிழ்த்தொண்டின் அருமை அளவிட்டு உரைக்கப்பட முடியுமோ! வாழ்க அடிகளார் நினைவு! வளர்க தனித்தமிழ் இயக்கம் !!