இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வடமொழி மயக்கறுத்த பல்கலைப் புலவர் தமிழர்களின் உள்ளம், உரை, செயல் அனைத்தினும் உறையத் தொடங்கிய தாழ்வு மனப்பான்மையை அகற்றவும், பண்டை நாட்களிலே தமிழர்தம் அறிவு பல்வேறு துறையிலும் மேலோங்கிச் சிறந்திருந்தது என்பதைத் தமிழர்கள் உணர்ந்து, தாய்மொழியைக் குறித்து ஒரு பெருமித எண்ணத் தோடு தலைநிமிர்ந்து வாழவும் உறுதுணையாக நின்றவர் பல்கலைப் புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்களாவார். அவர் இளமையிலேயே தெளியக் கற்றுத் தமிழுடன் ஆங்கிலத்திலும் முது கலைஞராய்த் தேர்ந்து, சட்டத் துறை