தமிழ்த்தாய்
௩
அவர் நீண்டநாள் உயிர் இதனாலன்றோ. AD தமிழைக் கைகட்கு ஆங்கிலம் ஆரியம் முதலிய வற்றையே கற்றுப் பழகும் நம் நாட்டவர் பலர் முப்பது அல்லது நாற்பது ஆண்டுக்குட் பலவகை நோய்களாற் பிடிக்கப்பட்டு மாய்ந்துபோகின்றனர்! தன்னியற்கையில் வலுப்பட்டு நில்லாத ஒருதூணின் மேற் பெருஞ் சுமைகளை ஏற்றினால் அவற்றைத் தாங்காமல் அது முறிந்து விழுவதுபோலத், தமக் குரிய மொழியைக்கற்று வலிவுபெறாத ஒருவனது அறிவின்மேல் வேறு மொழிகளை ஏற்றினால் அவற்றைத் தாங்கமாட்டாமல் அது பழுதுபட்டுப் போமன்றோ? தாய்ப்பால் நிரம்ப வுண்டு வளர்ந்த பிள்ளை ஆண்டு முதிரமுதிர அரியபெரிய முயற்சி களை யெல்லாம் எளிதிற் செய்து நீண்டநாள் உயிர் வாழ்தல் போலத் தமிழ்ப்பால் உண்டு வளர்ந்தவர் எத்தகைய மொழிகளையும் வருத்தமின்றிக் கற்று நெடுநாள் உயிர் வாழ்ந்திருப்பர். தமிழோடு மற்ற மொழிகளையுங் கற்றவர் நீண்டகாலம் உயிர் பிழைத் திருத்தலுந், தமிழைவிட்டு அயல் மொழிகளைமட்டும் பயில்கின்றவர் விரைவில் உயிர் மாளுதலும் இயற்கை யாய் நிகழ்தலைக் காண்பவர்களுக்கு நாம் கூறும் இவ் வுண்மை நன்கு விளங்கும். அறிவிற் சிறந்தவரான ஆங்கில நன்மக்கள் தமக்கு இயற்கையில் உரிய ஆங்கில மொழியை நன்றாகக் கற்ற பிறகுதான் வேறு மொழிகளைக் கற்கின்றார்கள்; தமதுமொழியைக் கல்லாமல் வேறு மொழிகளைச் சிறிதுங் கற்கவே மாட்டார்கள். இப் படிப்பட்ட உயர்ந்த பழக்கம் அவர்களிடத்தில் இருப்பதனாலேதான் அவர்கள் தமது மொழியில் நிகரற்ற புலமையுடையராய் இருப்பதொடு, தாம் கற்கும் வேறு மொழிகளிலும் வல்லவராய்ச் சிறந்து விளங்கி நீண்டநாள் உயிர்வாழ்ந்து உலகத்திற்கு