தமிழ்த் தாய்
௭
-மல் நாளடைவில் மாய்ந்துபோகத் தமிழில் இயல்பாற் பிறக்கும் அமைந்த இனிய ஒலிகளும் மிகவும் பொருத்தமான- இலக்கண முடிபுகளும் இயைந்து இஃது ஓதுதற்கு எளிதாய் இருத்தலினாற்றான் அங்ஙனம் இஃதின்னும் இளமைகுன்றாமல் நடைபெறுகின்றதென்று உணர்ந்துகொள்க. 'க்ருதம், 'த்ருஷ்டி' த்வரிதம்' 'ச்ருஷ்டி' 'ஹ்ருதய' முதலான ஆரியச் சொற்களைச் சொல்லிப்பாருங்கள்! அவை பேசுதற்கு எவ்வளவு வருத்தமாய் இயற்கைக்கு மாறுபட்டனவாய் இருக்கின்றன! இச்சொற்களையே தமிழ்வடிவாகத் திரித்துக் 'கிருதம்' திருட்டி' 'துரிதம்' சிருட்டி' 'இதயம்' என்று சொல்லிப்பாருங்கள்! அப்போது அவை பேசுதற்கு எவ்வளவு எளியனவாய் வருத்தமில்லாதனவா யிருக்கின்றன! இனி, இவற்றிற்கு நேரான 'இழுது' 'பார்வை' 'விரைவு' படைப்பு' 'நெஞ்சம்' முதலான தூய தமிழ்ச்சொற்களைச் சொல்லிப்பாருங்கள்! இவை அவற்றைக்காட்டிலுஞ் சொல்லுதற்கு இன்னும் எத்தனை எளியவாய் இனியவாய் இருக்கின்றன! இங்ஙனமே ஆரியம் முதலான மற்ற மொழிகளின் இலக்கணங்கள் இயற்கைக்குமாறாய் இருத்தலும், தமிழ் இலக்கணம் ஒன்றுமே இயற்கைக்குப் பொருத்தமாய் இருத்தலும் நாம் எழுதிய ஞானசாகர முதற்பதுமத்திலும், பண்டைக்காலத் தமிழர் ஆரியர் என்னும் நூலிலுங் கண்டுகொள்க. இங்கே அவையெல்லம் விரித்துரைப்பதற்கு இடமில்லை. அது நிற்க.
இனி மொழியின் அமைப்பையும் மக்களியற்கை உலக இயற்கைகளையுந் திறம்பட விரித்துரைத்த தொல்காப்பியம் போன்ற மிகப்பழைய நூலை நமது செந்தமிழிலன்றி வேறுமொழிகளிற் காணல் இயலுமோ? அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் முற்றும் எடுத்து விளக்-