பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தமிழ் நாடும் மொழியும்


ளார். இக்கோவில் சிற்பத் திறத்தில் தஞ்சைக் கோவிலைவிட உயர்ந்தது. இதனது விமானம் தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தைப் போன்று மிக அழகாக உள்ளது. இது 100 அடிச் சதுரமாக அமைந்துள்ளது. மேலும் இது ஒன்பது நிலைகளையும், உச்சியில் ஒரே கல்லாலாகிய சிகரத்தையும் உடையது. இத்தகைய சிறந்த கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவனது பெயர் கங்கைகொண்ட சோழேச்சுரர் ஆகும். இறைவனது நாள் வழிபாட்டிற்கும், பிற செலவுகளுக்கும் பல ஊர்கள் இராசேந்திரனாலும் அவனது வழித் தோன்றல்களாலும் இறையிலியாகக் கொடுக்கப்பட்டிருந்தன.

சோழப் பேரரசின் தலைசிறந்த தலைநகர் தஞ்சை மாநகரே. பிற்காலச் சோழ அரசை நிறுவிய விசயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றி தனது தலைநகராக்கிக் கொண்டான் என்பது நாம் அறிந்ததொன்றே. திருவுடைய நகரமாய் தஞ்சை அன்று விளங்கியது. இன்றும் எஞ்ஞா வளம்படைத்த நஞ்சைசூழ் பதிகளை உடையது தஞ்சை மாவட்டமே. மேலும் இங்குதான் சோழர்தம் சிற்பத் திறத்திற்கு எடுத்துக்காட்டாகவும், இராசராசனது பெருமை, புகழ் இவற்றின் சின்னமாகவும் விளங்கும் இராசராசேச்சுரம் ஈடும் இணையுமின்றி வானளாவ நின்று நிலவி நம் நெஞ்சை எல்லாம் குளிர்விக்கின்றது. இம்மாபெரும் கோவில் திருப்பணியை இராசராசன் தனது ஆட்சியில் 19-ஆம் ஆண்டில் தொடங்கி 23-ஆம் ஆண்டில் முடித்தனன். 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உடைய இக்கோவிலின்கண் அமைந்துள்ள நடுவிமானம் 216 அடி உயரம் உடையது. இதன் உச்சியில் 80 டன் எடையுள்ள கருங்கல் போடப்பட்டுள்ளது. விமானத்தின் மேலுள்ள செப்புக் குடத்தின் நிறை 3083 பலம். இதன் மேல் போடப்பட்