பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. பிற்காலப் பாண்டியர் வரலாறு

பாண்டியரைப் பற்றிக் கூறுவனவற்றுள் காலத்தால் முந்தியன மெகச்தனீசர் எழுதிய இந்திகா , சாணக்கியனின் அர்த்தசாத்திரம், அசோகனின் கல்வெட்டுக்கள் என்பனவாம். பாண்டியர் மதுரை, நெல்லை, இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களையும் ஆண்டார்கள். பாண்டிய நாடு பருத்திக்கும் முத்துக்கும் பெயர்பெற்ற நாடாகும். பிளினி பாண்டிய நாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். கி. மு. 40-லிருந்து கி. மு. 30 வரை ஈழ நாட்டைப் பாண்டியன் ஆண்டதாக மகாவம்சம் கூறுகிறது. ஒரு பாண்டிய மன்னன் ரோம் நாட்டுக்கு அகச்டசுசீசர் காலத்தில் ஒரு தூதுக்குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. கி.பி. 300 முதல் 600 வரை ஆண்ட பாண்டியரைப் பற்றி அறிய ஒருவிதச் சான்றும் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் களப்பிரர் ஆட்சியே. அதுமட்டுமல்ல; சோழரும் பல்லவரும் தத்தம் ஆட்சிக் காலங்களில் பாண்டியரைத் தலைதூக்கவொட்டாது அடக்கி ஒடுக்கியமையும் ஒரு காரணமாகும்.

பல்லவரும் பிறரும் எவ்வளவோ அடக்கியும் பாண்டியர்கள் கி. பி. 600-இல் தமக்கென ஒரு தனியரசை ஏற்படுத்திக்கொண்டனர். கி.பி. 600 முதல் 800 வரை ஆண்ட பாண்டியர்களைப் பற்றி நாம் அறியப் பெருந்துணை புரிவன பாண்டியன் நெடுஞ்சடையன் வெளியிட்ட வேள்விக்குடிப் பட்டயமும், பிற பாண்டியர் பொறித்த கல்வெட்டுக்களுமாம்.

கி. பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டியன் கடுங்கோனும், மாறவர்மன் அவனி சூளாமணியும் நாடாண்டனர். களப்பிரரை அடக்கி அழித்த பெருமை கடுங்கோன்