பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தமிழ் நாடும் மொழியும்


தொகுத்து வகுத்தது கி. பி. 1100-லேதான். சேக்கிழார் தித்திக்கும் பெரிய புராணம் எழுதியது இக்காலத்தில்தான். அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்கள் வாழ்ந்தது இக்காலத்திலேதான். வீரசோழியம் பிறந்தது இந்தக் காலத்திலேதான். யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம், கலிங்கத்துப்பரணி, இராமகாதை, மூவருலா, நளவெண்பா போன்ற தமிழ்ப் பெருநூல்கள் இந்த இடைக்காலத்திலே தான் எழுந்தன. குணவீரபண்டிதரால் நேமிநாதம் இக்காலத்திலேதான் எழுதப்பட்டது. நன்னூல் என்னும் பொன்னூல் தோன்றக் காரணமாக இருந்தது இந்த இடைக்காலமே. தண்டியலங்காரம் என்னும் அணிநூல் இக்காலத்திலேதான் எழுந்தது. சுருங்க உரைப்பின் இடைக்காலம் என்பது தமிழ் மொழி வரலாற்றிலே ஒரு திருப்பு மையம் என்று கூறலாம்.