பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறநாட்டார் ஆட்சிக் காலம்

149


கி. பி. 1603-இல் டச்சுக்காரரால் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கிந்தியக் கம்பெனியின் உரிமையாளராக நாளடைவில் ஆங்கிலேயர் ஆயினர். எனவே டச்சுக்காரருக்கும் ஆங்கி லேயருக்கும் அடிக்கடி போர் நடந்தது. இக்காலத்தில் பிரெஞ்சு நாட்டாரும் நம் நாட்டிற்கு வந்தனர். ஆனால் இறுதியில் ஆங்கிலேயரே வெற்றிபெற்று கி. பி. 1784-இல் நம் நாட்டின் முழு உரிமையும் பெற்றனர்.

ஆங்கிலேய ஆட்சியின் வளர்ச்சி

பிரான்சிசுடே என்பவன் கி. பி. 1639-இல் இப்பொழுது சார்ச் கோட்டையாக விளங்கும் இடத்தை வெங்கடப்ப நாயக்கனிடமிருந்து வாங்கினான். வாணிக அலுவலகமொன்று இங்கு நிறுவப்பட்டது. 1688-இல் இக்கோட்டையில் கோவிலொன்று கட்டப்பட்டது. இது ஆங்கிலேயரால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கிறித்தவக் கோவிலாகும். வாக்ச் க்ராவ்ட் (Foxeraft), வில்லியம் லேங் ஆர்ன், ச்டேரச னாம் மாச்ட்டர் என்பவர்கள் முறையே சென்னை கவர்னர்களாக வந்து, ஆங்கிலேய ஆட்சி முறைகளையும் நாகரிகத் தையும் பரப்பினர். இதே நேரத்தில் நம் தாயகம் வந்த பிரெஞ்சுக்காரர்கள், சென்தோமிலும், புதுச்சேரியிலும் அலுவலகங்களை நிறுவினர். புதுச்சேரியின் கவர்னர்களாக லெனு ஆர் (Lenior), டூமாசு (Dumas), டூப்ளே (Duple), என்பவர்கள் முறையே பணியாற்றினர். டூமாசு தஞ்சை மன்னன் தன் அரசைப் பெறுவதற்கு உதவிய காரணத்தால், காரைக்கால் நன்கொடையாகப் பிரெஞ்சுக்காரர்களுக்குக் கிடைத்தது. டூப்ளே பிரெஞ்சு ஆட்சியை நம் நாட்டில் நிலை நாட்ட முயன்றதால், ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றது. இறுதியில் ஆங்கிலேயரே வெற்றிபெற்றனர். ஆனால் கி. பி. 1756-இல் பிரெஞ்சு இந்தியக் கவர்னரான லாலி என்பவன் சிறந்த