பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்களாட்சிக் காலம்

157


டியதொன்றாகும். எனவே அதற்கு அரசியலார் ஆவன செய்யவேண்டும். மக்களது நல்லெண்ணத்தைப் பெறுவ தொன்றே அரசியலாரின் குறிக்கோளாக இருக்கவேண்டும். எல்லா மக்களும் இன்னல் ஏதுமின்றி இன்பமுடன் வாழ வழிசெய்யவேண்டும். இதற்குரிய வழி யாது? இதோ ! கவியரசர் கண்ட கனவு !

"பாரதசமு தாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க
பாரதசமு தாயம் வாழ்கவே ஜய ஜய ஜய (பாரதி)
முப்பது கோடி ஜனங்களின் சங்க
              முழுமைக் கும்பொது உடமை!
ஒப்பில் லாத சமுதாயம்
              உலகத் துக்கொரு புதுமை - வாழ்க (பாரத)
இனிஒ ருவிதி செய்வோம் - அதை
              எந்த நாளும் காப்போம்
தனிஒ ருவனுக் குணவில்லையெனில்
              ஜகத்தினை அழித் திடுவோம் - வாழ்க (பாரத)
எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்,
              எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர்நிறை, எல்லோரும் ஓர்விலை,
             எல்லோரும் இந்நாட்டு மன்னர் நாம்
             எல்லோரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
             எல்லோரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க"

(பாரதி)

கன்னித் தமிழன் கண்ட இக் கனவினை நனவாக்குவதே நமது கடமையாகும். கனவு நனவானுல் நானிலமும் வியக்கும் வண்ணம் நம் நாடு வளமுடன் வாழ்ந்து உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாய் விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனவே நம் நாட்டினர் அனைவரும்