பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தமிழ்நாடும் மொழியும்


மொழிக்கெனத் தனி இசை இல்லை. வட நாட்டுத் திராவிட மொழிகட்கு உள்ள இசையிலே ஆரிய மொழியின் செல்வாக் குச் சிறிது ஏற்பட்ட இசையே ஆரிய இசையாம். இன்றுள்ள கர்னாடக இசையின் கூறுகட்குள்ள-பண்கட்கு உள்ள பெயர்களையும் பண்களையும் தமிழ் முறைப்படி மாற்றியமைத்து விட்டால் அது தமிழிசையாகிவிடும். கர்னாடக இசையின் உயிரும் கருவும் இரத்தமும் சதையும் எலும்பும் தமிழ் - தமிசையே; அதன் தோலும் ஆடையுமே பிற மொழி இசை.

முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், கவிக்குஞ்சர பாரதியார் முதலியோர் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய இசைப் புலவர்களாவர். இராமாயண நாடகம் அருணாசலக் கவிராயரால் எழுதப்பட்டது. இதிலே கீர்த்தனைகள் உள. இராமசாமிசிவன், ஆனை ஐயா கனம் கிருட்டின அய்யர், கோபாலகிருட்டின பாரதியார், இராமலிங்க அடிகள், அண்ணாமலை ரெட்டியார் முதலியோர் 19-ஆம் நூற்றாண்டு இசைப் புலவர்களாவார்கள். இக்கால இசை நூல்களில் தலைசிறந்தவை இராமலிங்கர் பாடிய அருட்பா, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து முதலியவையாம். இருபதாம் நூற்றாண்டு இசைப் புலவரில் தலைசிறந்தவர் பாரதிதாசனாவார், மற்றும் நாமக்கல் கவிஞர், கவிமணி, பாரதியார் முதலியோரும் இசைத் தமிழில் பாக்கள் எழுதியுள்ளனர். இவர்கள் தவிர, உடுமலை நாராயண கவி, பாபநாசம் சிவன், கண்ணதாசன், கா. மு. செரிப் போன்றவர்கள் திரைப்படக் கதைகளுக்கு இசைப் பாடல்கள் எழுதி வருகின்றனர்.

நாடகத் தமிழ்

படிக்காத பாமரர்க்கும் நேரமில்லாத படித்தவர்க்கும் நல்லறிவும் இன்பமும் பயத்தற்பொருட்டுப் பயன்படுவது நாடகத்தமிழாகும். இசையும் இயலும் செவிக்குத்தான்