பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தமிழ்நாடும் மொழியும்


ளதிகாரத்தில் அமைந்துள்ளன. மேலும் பொருளதிகாரத் தின்மூலம் பழந் தமிழ் மக்களின் நாகரிகம், பண்பாடு முதலியவற்றை நன்கு அறியலாம். நச்சினர்க்கினியர், சேவைரையர், இளம்பூரணர், பேராசிரியர்,தெய்வச்சிலையார், கல்லாடனுர் என்போர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர். இந்நூல் இடைச்சங்க காலத்தைச் சேர்ந்தது.

தொல்காப்பியருக்குப் பின்னல் பொருள் பிரியலாயிற்று. பிற்காலத்தில் பொருளியல் நான்காக வளரலாயிற்று. தொல்காப்பியர் சில நூற்பாக்களினுல் கூறிய யாப்பும், அணியும் தனித்தனி இலக்கணங்களாக வளரலாயின. அகத்திணையியலும் புறத்திணையியலும் இவ்வாறே தனித் தனியாகப் பிரிந்து வளரலாயின. எனவே அவற்றிற்கு எல்லாம் தனித்தனி நூல்கள் உண்டாயின.

அகப்பொருள் இலக்கண நூல்கள்

அகப்பொருள் இலக்கண நூல்கள் பல. அவற்றுட் சிறந்தது நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப்பொருள் என்னும் நூலே. இது தொல்காப்பியத்தைப் பின்பற்றியதாகும். இந்நூலாசிரியர் காலம் பாண்டியன் குலசேகரன் காலமாகும். இவன் காலம் கி. பி. 12-ஆம் நூற்ருண்டாகும். இந்நூல் 252 சூத்திரங்களைக் கொண்டது. இந்நூலின் துணை கொண்டு ஐந்தினைகளைப் பற்றிய செய்திகளையும், காதல், கற்பு இவற்றைப் பற்றியும், மக்களது ஒழுகலாற்றையும் நன்கு தெரிந்துகொள்ளலாம். மாறனகப் பொருள் என்பது மற்ருெரு அகப்பொருள் நூலாகும். இதன் ஆசிரியர் குருகைப் பெருமாள் கவிராயர் ஆவார்.

புறப்பொருள் இலக்கண நூல்கள்

தொல்காப்பியத்திற்குப் பின்பு புறப்பொருளுக்கு எனத் தோன்றிச் சிறந்து விளங்கும் நூல் புறப்பொருள் வெண்பா