பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் இலக்கண வளர்ச்சி

187


மாலையாகும். இந்நூல் வெட்சி, கரந்தை, வஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை முதலிய புறப் பொருள்களைப் பற்றி வெண்பாவால் பாடப்பட்டதாகும். இந்நூலாசிரியர் ஐயனுரிதனுர் ஆவார். இவரது காலம் கி. பி. 9-ஆம் நூற்றாண்டாகும். சாமுண்டி தேவனார் என்பவர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். தமிழ்நாட்டுப் போர் முறைகளை இந்நூல் நன்கு எடுத்துக் காட்டுகின்றது. இந்நூலுக்கு அடிப்படை தொல்காப்பியமும், பன்னிரு படலமுமாகும். தொல்காப்பியத்தில் புறப்பொருள் ஏழு திணைகளை உடையது. ஆளுல் புறப்பொருள் வெண்பாமாலையோ பன்னிரண்டு திணைகளையுடையது.

யாப்பிலக்கண நூல்கள்

தொல்காப்பியர் உவம இயல் ஒன்றே கூறினர். ஆனல் பிற்காலத்திலோ யாப்பிலக்கணங்கள் எனத் தனிப் பெரு நூல்கள் பல உண்டாயின. அவற்றுள் ஆன்ருேராலும் சான்ருேராலும் நன்கு போற்றப்படுபவை யாப்பருங்கலமும், யாப்பருங்கலக் காரிகையுமாகும். இவற்றை யாத்தவர் அமிர்த சாகரர் ஆவார். இவர் வேளாளர்; சமண சமயத்தினர்; கி. பி. 11-ஆம் நூற்ருண்டினர். இவர் இயற்றிய யாப்பருங் கலக்காரிகை யாப்பிலக்கணத்தைக் கட்டளைக் கலித்துறை என்னும் பாவால் கூறுகின்றது. இதற்குக் குணசாகரர் என்பவர் உரை எழுதி உள்ளார். மற்ருெரு நூலாகிய யாப்பருங்கலவிருத்தி சூத்திரப்பாவால் ஆனது.

அணி இலக்கண நூல்கள்

அணியை மட்டும் பெரிதும் விரித்துக் கூறும் நூல்கள் இரண்டு. ஒன்று தண்டியலங்காரம்: மற்ருென்று மாறன.லங்காரம். தண்டியலங்காரம் என்பது மகாகவி தண்டியாசிரியர் எழுதிய காவியாதரிசம் என்னும் வடநூலின் மொழி