பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தமிழ்நாடும் மொழியும்


பெயர்ப்பு ஆகும். இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று இயலாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 125 சூத்திரங்களை உ ைட யது. இந்நூலாசிரியர் வரலாறு தெளிவாகத் தெரிவதற்கில்லை. இந்நூலில் கவி வகைகளும், கவிகளினுள்ளே நின்று அழகு செய்வனவாகிய குண வகைகளும், பொருளணி வகைகளும், மடக்கு, சித்திர கவி இவற்றின் வகைகளும், செய்யுளுக்கு ஆகாத வழுக்களும் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மாறனலங்காரம் என்ற அணி நூல் குருகைப் பெருமாள் கவிராயரால் எழுதப்பட்டதாகும். தொல்காப்பியத்தில் சுருக்கமாகச் சொல்லியவற்றை உதாரணங்காட்டி விரிவாக இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார். இந்நூல் சூத்திர யாப்பால் அமைந்தது.

இவை போக, எழுத்தும் சொல்லும் மட்டும் கூறும் நூல் நன்னூல் என்னும் பொன்னூலாகும். இதன் ஆசிரியர் பவணந்தி முனிவர் ஆவார். இவர் தொண்டை நாட்டுச் சனகாதிபுரத்தில் பிறந்தவர். இவரது தந்தை சன்மதி முனிவர் ஆவார். இவரது சமயம் சைன சமயமாகும். சீயகங்கன் என்னும் சிற்றரசன் வேண்டுகோளின்படி இவர் நன்னூலை இயற்றினார். இவரது காலம் கி. பி. 13-ஆம் நூற்ருண்டு ஆகும். மயிலை நாதர், சங்கர நமச்சிவாயர், விசாகப்பெருமாள் ஐயர், இராமானுசக் கவிராயர், ஆறுமுக நாவலர், சிவஞான முனிவர் என்போர் நன்னூலுக்கு உரை எழுதி உள்ளனர். இவற்றுள் சங்கர நமச்சிவாயர் உரை விருத்தி உரை எனப்படும்.

தொல்காப்பியத்திற்குப் பின்பு ஐந்திலக்கணமும் கூறும் நூல்கள் வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் என்பனவாம். வீரசோழியத்தின் ஆசிரியர் புத்தமித்தரனர் ஆவார். இவர் தஞ்சையைச் சேர்ந்த பொன்பற்றி என்னும் ஊரினர். இவரது காலம் கி. பி. 11-ஆம் நூற்றாண்டாகும்.