பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் மொழியும் வடமொழியும்

197


முற்றிலும் வெற்றிபெற முடியவில்லை. மூவேந்தர் மரபினர் தமிழை ஆட்சிமொழியாகப் போற்றிவந்தமையாலும், சமயத் துறையில் நாயன்மார்களும், ஆழ்வார்களும் நல்ல தமிழில் இனிய பாடல்களை இயற்றி மக்கள் நாட்டத்தைத் தங்கள்பால் இழுத்தமையாலும், தமிழ் சீர்குலையாமல் இன்று வரை வாழ்ந்துவருகிறது.

சைவ சித்தாந்தக் கொள்கைகள், சங்கராச்சாரியாருடைய வேதாந்தக் கருத்துக்கள், இராமானுசரது விசிச்டாத்வைதம் போன்றவை புகுந்த காரணத்தினாலும்ம் தமிழில் வட சொற்கள் பல நுழைந்தன. வைணவப் பெருமக்களும் ஈடு முதலியவற்றை மணிப்பிரவாள நடையிலேயே எழுதினர். இவ்வாறு சமணர்களாலும், வைணவர்களாலும் உண்டாக்கப்பட்ட மணிப்பிரவாள நடை கி. பி. 1600-க்குப் பின்னர் வரவரக் குறைந்து இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் முற்றிலும் மறைந்துவிட்டது. எடுத்துக்காட்டு :

'அக்கிராஸனாதிபதி அவர்களே! உப அத்யகூஷகர் அவர்களே! எதிரே பிரஸன்னமாயிருக்கும் மஹா ஜனங்களே! உங்களுக்கு முதலில் என் நமஸ்காரம்."

தமிழிற் பிற மொழிச் சொற்கள் மிகுதியாகக் கலக்கப் பட்டதால் தமிழ் கெட்டு உருமாறற்கு வழி ஏற்பட்டது என்பதற்குச் சான்று பல உள. மலையாள மொழியை எடுத்துக் கொள்ளுவோம். மலையாளம் என்பது வேறு எதுவும் அல்ல; தமிழில் வரம்பு மீறி வடமொழியின் கூறுகள் பலவற்றைக் கலந்தமையால் ஏற்பட்ட மொழியாகும். அத்தகைய செயலைச் செய்தவர் எழுத்தச்சன் என்பவராவர். அவர் செய்த செயலினால் இன்று மலையாள மொழி தமிழின் கிளை மொழிதான என்று ஐயப்பட வேண்டிய நிலையிலுள்ளது. இவ்வாறே நன்னய பட்டர் என்பவர் வேங்கடத்தருகே,