பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தமிழ்நாடும் மொழியும்


டையும் பெருக்கினால் இருநூற்றுப் பதினாறு என்ற தொகை வரும். உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்து உயிர்மெய் எனப் பெயர்பெற்றது.

அடுத்து, தமிழ் எழுத்துக்களின் பண்டைய வடிவங்களையும் பிற்காலத்தில் அவற்றில் ஏற்பட்ட மாறுதல்களையும் முறையாக ஆராய்வோம்.


'ஈ' என்பது, ஈ என்றும் " " என்றும் இருவிதமாக எழுதப்படுகிறது. மற்ற நெடில் எழுத்துக்களுக்குச் சுழி இருப்பதை நோக்கியே சிலர் இவ்வாறு எழுதுகின்றனர். ஆனால் இலக்கணத்தில் இதுபற்றி ஒன்றும் கூறப்படவில்லை. அதனால் ஈ என்ற வடிவே பண்டுதொட்டு வழங்கிவந்திருக்கலாம். எகரமும் ஒகரமும், அவற்றின் நெடில்களும் தொல்காப்பியர் காலத்தே பின்வருமாறு எழுதப்பட்டு வந்தன.

 எ், ஒ் - குறில்கள்.
எ , ஒ - நெடில்கள்.


பண்டைக்காலத்தே ஒலையிலே புள்ளியிட்டு எழுதும் வழக்கமில்லை. எனவே இவை போன்ற குறில்களையும் நெடில்களையும் ஒரேமாதிரியே எழுதிவந்தனர். இதனால் படிப்பார்க்குக் குறில், நெடில் பற்றி மயக்கமும், படிப்பதில் தயக்கமும் ஏற்பட்டன. இந்தத் தயக்கத்தையும் மயக்கத்தையும் நீக்குவதற்காக வீரமாமுனிவர் இவ்வெழுத்துக்களைக் கீழ்வருமாறு எழுதினர் :

எ, ஒ = குறில்.
ஏ, ஓ = நெடில்.
 


மெய்யெழுத்துக்கள்

மெய்யெழுத்துக்கள் யாவும் புள்ளி மேலிடப்பெற்று எழுதப்பட்டன. ஆனால் ஏட்டில் எழுதும்பொழுது புள்ளி