பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/219

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

204

தமிழ்நாடும் மொழியும்


குற்றியலுகரமும் குற்றியலிகரமும்

இவையிரண்டையும் குறிக்க இவற்றின் மீது பண்டு புள்ளியிடப்பட்டது.

கு ச் சு், குழலினிதி் யாழினிது

இன்று இவ்வழக்கம் கைவிடப்பட்டது.

எட்டு என்று இன்று எழுதினுல் பெரும்பாலும் எண்ணையும், அடியையும் குறிக்கும். பழங்காலத்தே,

எட்டு என்பது எண்ணையும், எட்டு என்பது எள்ளென்னும் பொருளையும் குறிக்கும்.

இன்னும் தமிழ் நெடுங்கணக்கில் எத்தனையோ மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்பட்டுத்தான் வந்துள்ளன.

சீர்திருத்தம்

தமிழ் நெடுங்கணக்கு இத்தனை மாற்றங்களைப் பெற்ற போதிலும், இன்னும் முழுமையான உருவைப் பெறவில்லை. அதில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் சில உள. இன்று தமிழ் நெடுங்கணக்கிலே சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று கூறுவோரை இருவகைப்படுத்தலாம். தமிழையும், அதன் எழுத்தையும் சிதைக்கவேண்டும் என்ற தீய எண்ணத்தோடு ஒரு சாரார் தமிழ் நெடுங்கணக்கிலே திருத்தம் வேண்டும் என்கின்றனர். தமிழ் நெடுங்கணக்கு மேலும் அழகும் எளிமையும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே சிலர் சீர்திருத்தம் வேண்டும் என்கின்றனர்.

உயிர் எழுத்துக்கள்

உயிர் எழுத்துக்களிலே இகர நெடில் தவிர, ஏனைய வற்றின் நெடில் எல்லாம் குறிலின் வடிவத்தையே பெற்றுள்ளன.இகரத்தின் நெடில் மட்டும் வேறு வடிவம் ஒன்றைப்