பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/224

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நெடுங்கணக்கும் பிறவும்

207


எடுத்துக்காட்டு: வெட்டினான்.

இத்துணைச் சிறப்புக்கள் பிறமொழிகளில் பெரும்பாலும் கிடையா. இத்திணைப் பாகுபாடு பற்றிக் கால்டு வெல் கூறுவதாவது:-

“திராவிட மொழிகளின் திணைப் பாகுபாடு இந்திய ஐரோப்பிய மொழிகளிலும், செமிடிக் மொழிகளிலும் உள்ள பாகுபாடு போன்று கற்பனையால் ஆகியதன்று; சிறந்த தத்துவ உணர்வால் ஆகியது என்பது தெளிவு. பகுத்தறிவு உடையவை, பகுத்தறிவு இல்லாதவை என்ற பிரிவு சிறப்பும் இன்றியமையாமையும் உடையதன்றோ?”

உயர்திணையில் மட்டும் ஆண்பால், பெண்பால் என்று பிரிவினை செய்த தமிழர்கள், அஃறிணையில் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று ஒருவர் வினவலாம். வினாச் சரியே. அஃறிணையிலே உயிருள்ளனவும் உயிர் இல்லனவும் சேர்க்கப்பட்டுள்ளன. உயிரற்றனவற்றிலே ஆண், பெண் வேற்றுமை அறவே கிடையாது. உயிருள்ளனவற்றிலே ஒருசிலவே ஆண், பெண் வேற்றுமையுடையன. இலக்கணம் பொதுவாகப் பெரும்பான்மை பற்றியதாகும். எனவே தான் பண்டைத் தமிழ்ப் புலவர்கள், உயர்திணைக்கு ஆண், பெண் வேறுபாடு கற்பித்து, அஃறிணைக்கு அவ்வேறுபாடு கற்பியாது விட்டுவிட்டனர். இதுகாறும் கூறியவற்றால் தமிழின் கண் விளங்கும் திணை, பால் பாகுபாடு பகுத்தறிவின் அடிப்படையில் எழுந்தது என்பதும், பிறவற்றில் அவ்வடிப்படையில்லை என்பதும் விளங்கும்.

திரிசொல்லும் திசைச் சொல்லும்

தமிழிலே காணப்படும் சொற்களை நான்கு வகையாகப் பிரித்தல் பண்டைய இலக்கணம் வல்லார் வழக்கமாகக் காணப்படுகிறது. அவற்றுள் ஒன்றே திரிசொல் எனப்படு-