பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நெடுங்கணக்கும் பிறவும்

211


எழுத்துக்களைப் பார்த்து அவைபோல் அமைக்கப்பட்ட ஒருவகை எழுத்தாகும். உ, ஊ, க, ண, த, ன, ய, வ என்னும் தமிழ் எழுத்துக்களை, கிரந்த எழுத்து அமைத்தவர்கள், அப்படியே தம் கிரந்த எழுத்துக்களோடு சேர்த்துக் கொண்டனர்; அ, ஆ, ஈ, ஒ, ஒள, ட, ர, வ, ழ என்னும் எழுத்துக்களைச் சிறிது திருத்தித் தம் கிரந்த எழுத்துக்களாக அமைத்துக்கொண்டனர். மலையாள எழுத்துக்கும் கிரந்த எழுத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை மிகச் சிறியதே.

கரோசிடி எழுத்தும் பிராமி எழுத்தும்

மிகப் பழங்காலத்தனவாக இந்தியாவிற் கிடைக்கும் கல்வெட்டுக்களில் இரண்டு வித எழுத்துக்கள் காணப்படு கின்றன. அவை பிராமி, கரோசிடி என்பனவாம். பிராமி என்பது இடப்புறத்திலிருந்து வலப்புறமாகவும், வலப்புறத் திலிருந்து இடப்புறமாகவும், மாறி மாறி எழுதப்படுகின் றது. கரோசிடியும், பிராமியும் வேறுவேருனவை.

இலக்கண வளர்ச்சி
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவில கால வகையி னுனே '

என்று பவணந்தியார் கூறுகிருர். இலக்கணம் செய்யப் புகு கின்ற ஆசிரியன் இறந்தன விலக்கி எதிரது போற்றித் தன்னு லைக் கொண்டு வரவேண்டும். நன்னூலார் இம்முறையினைக் கையாண்டுள்ளார். அவர் நூலில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.அவை யாவையும் எடுத்துக்காட்டி அவை இலக்கண வளர்ச்சிக்கு அறிகுறியா என்று ஆராயின் அது. ஒரு சிறந்த ஆராய்ச்சியே ஆகும். இங்கே ஒன்றிரண்டு வேறுபாடுகளை எடுத்துக்காட்டி அவை இ ல க் க ண வளர்ச்சிக்கு அறிகுறியா என்று பார்ப்போம்.