பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்மொழி வளர்ச்சி

219


பெளத்தர்

தமிழ்க் குழந்தைக்குப் பல செல்வச் செவிலியர் உண்டு. அவர்களுள் ஒருத்தியே பெளத்தமாது. பெளத்த சமயம் சங்க காலத்திலேயே தமிழகத்தில் இருந்தமைக்குரிய சான்றுகள் உள. பெளத்தர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் மிகப்பலவாகும். இவர்கள் இலக்கியம், இலக்கணம் ஆகிய இரு துறைகளிலும் பல நூல்கள் இயற்றியுள்ளனர். தமிழ்த்தாயின் திரு இடையை அழகுபடுத்தி நிற்கும் மணிமேகலையைச் செய்த சாத்தனர் புத்த சமயத்தவர். பிற் காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்தே, புத்தமித்திரனுர் என்பவர் வீரசோழியம் என்றதோர் இலக்கண நூலைச் செய் தனர். நற்றிணை 72-ஆம் பாட்டினைப் பாடிய இளம்போதியார் என்பவர் புத்த சமயத்தவராவர்.

ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசியை இயற்றியருளிய நாதகுப்தனர் என்பவர் புத்த சமயத்தவர். சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், விம்பசார கதை முதலிய பல நூல்கள் பெளத்தரால் இயற்றப்பட்ட தமிழ் நூல்க ளாகும். ஆல் இவை நான்கும் இன்று பெயரளவிலும், சிற்சில பாட்டுக்கள் அளவிலுமே நிற்கின்றனவே தவிர, முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை.

பிற்காலச் சோழர் காலத்துத் தமிழ் வளர்ச்சி

சங்க காலத்தில் பாண்டியர்கள் சிறந்த முறையில் தமிழ் வளர்த்ததுபோல் பிற்காலத்தில் தமிழ் வளர்த்த மன்னர்கள் பிற்காலச் சோழப் பேரரசர்கள் ஆவர். இவர்கள் காலத்தில்தான் தமிழில் பல்வேறு இலக்கியங்கள் வளர்ந்தன என்னலாம். எனினும் இவற்றில் சிறப்பாக வளர்ந்தவை கல்வெட்டுக்களாகும். அக்கால வரலாற்றினையும், இலக்கிய வளனையும் தெரிந்து கொள்வதற்கு இக்கல்