பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தமிழ் நாடும் மொழியும்


சிம்பென்சி, கிப்பல், உரேங்குடாண் என்பவராம். இவர்களின் எலும்புக்கூடுகள் தென்னகத்திலே ஏராளமாகக் கிடைக்கின்றன. எனவே பழைய கற்கால மனிதனின் தாயகம் தென்னாடே எனில் தவறில்லை. கரடுமுரடான கல்லைக் கற்கால மனிதன் உடனே பயன்படுத்தவில்லை. முதலில் அவன் கிளைகளையும் கொப்புகளையும் பயன்படுத்தினான்.

முட்டை வடிவான கோடரிகள், ஈட்டிகள், குழி தோண்டு கருவிகள், வட்டக் கற்கள், ஒருபக்கம் மட்டும் கூர்மைத் தன்மை வாய்ந்த கருவி, நீண்ட கத்திக் கற்கள், சுத்தியல் போன்றவை கற்கால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகளுள் குறிப்பிடத்தக்கனவாகும். கருவிகள் செய்கின்ற அளவுக்கு மென்மையும் உரிய வன்மையும் வாய்ந்த கற்பாறைகள் தென்னகத்திலே செங்கற்பட்டு, சித்தூர், கடப்பை, கர்நூல் ஆகிய மாவட்டங்களில் உள்ளன. அவற்றை இன்றும் காணலாம். மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பழைய கற்கால மனிதன் வாழ்ந்த குகைகள் காணப்படுகின்றன.

கற்கருவிகளின் மூலம் கற்கால மனிதன் வேட்டையாடினான்; வேட்டையாடி விலங்குகளின் இறைச்சியை அப்படியே உண்டான். இறைச்சியை உண்ணற்கேற்றவாறே அவன்றன் பற்கள் அமைந்திருந்தன. அதுமட்டுமல்ல; பழைய கற்காலக் கருவிகளிற் சிலவும் இறைச்சியைக் கிழிக்கவே செய்யப்பட்டன போல அமைந்துள்ளன.

இவ்வாறு வேகாப் புலாலை உண்ட மனிதன் காலப்போக்கில் நெருப்பைக் கண்டுபிடித்தான். முதலில் மூங்கிலைக் கண்டான்; அவை ஒன்றோடொன்று உராய்வதினால் நெருப்பு உண்டாவதைக் கண்டான். உடனே அவன் இரண்டு மரக் கட்டைகளைக் கொண்டு தீயுண்டாக்கினான். இறைச்சியை