பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரலாற்றிற்கு முற்பட்ட காலம்

15


வேகவைத்தான்; உண்டான். பிறகு தீக்கடைக்கோல், சக்கிமுக்கிக் கற்கள் என்பனவற்றைக்கொண்டு தீ உண்டாக்கினான்.

இவ்வாறு தீ உண்டாக்கி வாழ்ந்த மனிதன் ஓரிடத்திலும் நிலைத்து வாழவில்லை. நாடோடி வாழ்க்கையே அவன் நடத்தினான். ஆனால் நாளாகஆக இன உணர்ச்சி அவன் உள்ளத்தில் தோன்றிப் பரவலாயிற்று. எனவே சேர்ந்து வாழலானான். ஆகவே மனிதக் கூட்டம் உண்டாயிற்று. இவ்வாறு தோன்றியது மனித சமுதாயம். இவர்களின் சந்ததியினர் இன்றும் மலைகளில் வாழ்கின்றனர். பண்டைக் கால மக்கள் இறந்தவரைக் கழுகுக்கும் நரிக்கும் இரையாகுமாறு வீசிச் சென்றனர். இவ்வழக்கம் இன்றைக்கும் திபெத்திலே காணப்படுகின்றது.

பழைய கற்காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த மனிதன் ஆடையற்றவனாகவே அலைந்தான். நாள் பலசென்றன. மரவுரியினையும், இலைகளையும் ஆடையாக அவன் பயன்படுத்தினான். பின்னர் தோலாடை பயன்படுத்தப்பட் டது. ஆகப் பண்டையக்கால மனிதன் எளிய உடையே பூண்டான். அவ்வுடைக்கேற்றவாறே தட்ப வெட்ப நிலையும் அமைந்திருந்தது.

இனி கலைகளைப் பார்ப்போம். பண்டைக்கால மனிதன் ஓரளவுக்குக் கலை உணர்ச்சி உடையவனாகவும் வாழ்ந்தான். அவன்றன் கலையுணர்ச்சியைத் தெள்ளத் தெளியக்காட்டும் ஓவியங்கள் பல இன்றும் ஐரோப்பிய நாடுகளிலே மலைக் குகைகளிலே காணப்படுகின்றன. தென்னகத்துக் குகைகளை ஆராய்ந்த பேரறிஞர் உட் என்பவர் தொடக்கத்தில் தென்னகத்திலே பழைய கற்கால ஓவியங்கள் இல்லை என்று கூறினார். ஆனால் அதற்குப் பின்னர் நடத்தப்பெற்ற