பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தமிழ் நாடும் மொழியும்


கிறோம். கனிகளைப் பறிக்கிறோம். இன்னும் ஆட்டுரல் போன்ற கற்கருவிகளைப் பயன்படுத்துகிறோம். தோசை சுடப் பயன்படுவது தோசைக் கல்லாகும். இன்று இது இரும்பாலானதாக இருந்தபோதிலும் அப்பெயர் பழங்காலத்தில் தோசை சுடக் கல்லே பயன்பட்டது என அறிவிக் கிறது. ஆக இன்னும் நாம் புதிய கற்காலப் பழக்க வழக்கங்களையும் பொருள்களையும் முழுதும் மறந்தும் விடவில்லை; துறந்தும் விடவில்லை.

இன்றைய ஆராய்ச்சி

இதுவரை கூறியவற்றால் வரலாறு என்பது பழைய கற்காலத்திலிருந்து தொடங்குகிறது என்பது இனிது விளங்கும். ஆனால் பேராசிரியர் டேர் (Dare) என்பவர் கற்காலத்துக்கு முன் எலும்புக் காலம் ஒன்று உண்டு என்பதைத் தமது ஆராய்ச்சியின் காரணமாய்க் கூறியுள்ளார் என சோகன்சுபர்க் (Johannesburg) செய்தி கூறுவதாக அண்மையில் ‘இந்தியன் எக்ச்பிரசு' (Indian Express) நாளிதழ் வெளியிட்டதை நாம் அறிவோம். எனவே கற்காலத்திற்கு முன்னர் மனிதன் பல், எலும்பு, கொம்புகளைப் பயன்படுத்தி வாழ்ந்து வந்தான் எனவும், அக்காலத்தை எலும்புக் காலம் எனப் பெயரிட்டு அழைத்தல் சாலப்பொருந்தும் எனவும் நாம் அறிகின்றோம்.