பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லவப் பேரரசு

65


முற்காலப் பல்லவருள் முதல்வன் பப்பதேவன். பல்லவர்கள் தமிழிலக்கியங்களில் 'காடு வெட்டிகள்' என அழைக்கப்படுகின்றனர். அதனை மெய்ப்பிப்பதுபோல பப்பதேவன் தனது ஆட்சிக் காலத்தில் 100,000 கலப்பைகள் உழவர்கட்கு வழங்கி இருக்கிறான். அவர்கள் காடுவெட்டி நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கி இருக்கின்றனர்.

பப்பதேவனுக்குப் பிறகு அவன்றன் மகனான சிவச்கந்தவர்மன் பல்லவ மன்னனானான். பட்டமேறியதும் இவன் காஞ்சியைக் கைப்பற்றினான். இவ்வெற்றிக்காக இவன் விசயச்கந்தவர்மன் என அழைக்கப்பட்டான். மயிதவோலு, இரகதகல்லி என்னும் இரு பட்டயங்கள் பிராகிருத மொழியில் அமைந்துள்ளன. அவை சிவச்கந்தவர்மனால் வெளியிடப்பட்டவை. அந்தப் பட்டயங்களின் மூலம் 'சிவச்கந்தவர்மன் முற்காலப் பல்லவருள் சிறந்த மன்னன்; அவன் அசுவமேத யாகம் செய்தான்; தர்மராசன் என்ற பட்டப் பெயருடையான்; அவன் மௌரியரைப் பின்பற்றி அரசாண்டான்; எனவே அவன்றன் ஆட்சி வட நாட்டு முறையில் அமைந்திருந்தது' என்ற கருத்துக்களை அறியலாம்.

சிவச்கந்தவர்மனுக்குப் பிறகு அவன் மகன் புத்தவர்மன் பட்டம் பெற்றான். அப்புத்தவர்மனின் மனைவி சாருதேவி. அவளால் வெளியிடப்பட்ட பிராகிருதப் பட்டயம் ஒன்று கோவிலுக்குத் தானம் அளித்ததைக் குறிக்கிறது. புத்தவர்மனுக்குப் பிறகு அவன் மகன் புத்யங்குரன் பட்டமேறினான்.

மற்றொரு நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஒன்று சிவச்கந்தவர்மன் பரம்பரையில் வந்த விட்டுணுகோபன் காலத்தில் நடைபெற்றது. விட்டுணுகோபன் என்னும் பல்லவ மன்னன் கி. பி. 350-இல் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு நாட்டை ஆண்டுவந்தான். அக்காலை வடநாட்டு