பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தமிழ் நாடும் மொழியும்


மன்னனான சமுத்திரகுப்தன் அவன் நாட்டின் மீது படையெடுத்தான்.

இடைக்காலப் பல்லவர்

விட்டுணுகோபனுக்குப் பின்பு ஆண்ட பல பல்லவ அரசர்களையே இடைக்காலப் பல்லவர் என்று நாம் கூறவேண்டும். வடமொழிச் செப்பேடுகளும், கல்வெட்டுகளுமே இவர்களைப்பற்றி நாம் அறியத் துணை செய்கின்றன. இவர்கள் காலத்தை இருண்ட காலம் என்று கூறினாலும் பொருந்தும். இக்காலத்தில்தான் தமிழகத்தில் அந்நியர் படையெடுப்புக்களும், குழப்பங்களும் நிகழ்ந்தன. இடைக்காலப் பல்லவ மன்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையிலிருந்து பட்டயங்களை வெளியிட்டுள்ளனர். இதிலிருந்து குப்தர் படையெடுப்பினால், பல்லவராட்சி சற்று தளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என அறியலாம்.

விட்டுணுகோபனுக்குப் பின்வந்த பல்லவரைத் திரு. கோபாலன் பின்வருமாறு தமது நூலில் முறைப்படுத்திக் காட்டியுள்ளார். குமாரவிஷ்ணு, கந்தவர்மன், வீர கூர்ச்சவர்மன், கந்த சிஷ்யன் (இரண்டாவது கந்தவர்மன்), சிம்மவர்மன், இரண்டாவது குமாரவிஷ்ணு, மூன்றாவது கந்தவர்மன், இரண்டாவது சிம்மவர்மன், மூன்றாவது குமார விஷ்ணு, விஷ்ணு கோபவர்மன், மூன்றாவது சிம்மவர்மன், சிம்ம விஷ்ணு. இவருள் வீர கூர்ச்சவர்மன் நாக மன்னனான கந்த நாகன் என்பவனது மகளை மணஞ் செய்துகொண்டான். பின்னர் மாமன் துணையுடன் தொண்டை மண்டலத்திலே இழந்த பகுதிகளை மீட்டிக்கொண்டான்.

வீர கூர்ச்சவர்மனுக்குப் பிறகு இரண்டாம் குமார விஷ்ணு என்பவன் பட்டமேறினான். இவன் வீர கூர்ச்சனின் பேரன்; கந்த சிஷ்யனின் மகன். இவன் காலத்தொடக்கத்தில் காஞ்சி சோழர் கையில் இருந்தது. குமாரவிஷ்ணு சோழரை