பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லவப் பேரரசு

67


வென்று அதனைக் கைப்பற்றிக்கொண்டான். வடமொழியை வளர்த்த இப் பல்லவருக்கும், பிராகிருத மொழியை வளர்த்த பல்லவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது பேராசிரியர் துப்ரேயில் கருத்து. வடமொழியை வளர்த்த பல்லவர் காலத்துக்கும், பிராகிருதத்தை வளர்த்த பல்லவர்க்கும் இடையே ஒருவித இடைவெளியும் இல்லை என்பது காலஞ்சென்ற பேராசிரியர் ஈராசடிகள் கருத்து.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இராசசிம்மப் பல்லவனுடைய வயலூர்க் கல்வெட்டு பல்லவ மன்னர் பட்டியல் ஒன்றைத் தெளிவாகவும் ஒழுங்காகவும் தருகிறது. அதன் மூலம் முதலிரு பல்லவப் பரம்பரையினருக்கு இடையே எந்தவித வேற்றுமையும் இல்லை; இருவரது கோத்திரமும் ஒன்றே; குலமும் ஒன்றே; இந்தக் காலத்தில் தான் பல்லவர்கள் கடம்பரோடும், கங்கரோடும் அடிக்கடி போரிட்டனர் என்ற செய்திகளை அறியமுடிகின்றது.

பொற்காலம் - பிற்காலப் பல்லவர் பிற்காலச் சோழர் வரலாற்றிலே பொற்காலம் இராசராசன் காலத்திலிருந்து தொடங்குவது போலவே, பல்லவர் காலத்தின் பொற்காலம் சிம்மவிட்டுணு காலத்திலிருந்து தொடங்குகிறது என்னலாம். சிம்ம விட்டுணு சிம்மவர்மனின் மகனாவான்.

சிம்மவிட்டுணுவின் காலம் கி. பி. 575-600. இவன் காலத்திலிருந்து பல்லவராட்சி விரிவும், பேரும், சீரும் அடையத் தொடங்கியது. இவன் தனது கல்வெட்டிலும், பட்டயத்திலும், சோழரையும், பாண்டியரையும், சிங்களவரையும், களப்பிரரையும் முறியடித்ததாகக் கூறியுள்ளான். இவன்றன் சமயம் வைணவம். இவன், இவன்றன் இரு மனைவியர் ஆகிய மூவரது உருவச்சிலைகளும் மாமல்லபுரத்