பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லவப் பேரரசு

81


கி. பி. 600-630 வரை தொண்டை நாட்டையும் சோழ வள நாட்டையும் ஆட்சி புரிந்த பல்லவப் பேரரசனாகிய மகேந்திரவர்மனே கோவில் கட்டிட அமைப்பில் புதியதொரு முறையை உண்டாக்கினான். தென்னாட்டில் முதன் முதலில் கற்கோவில்களைக் கட்டத் தொடங்கிய பெருமை இவனுக்கே உரியது. பெரிய பெரிய கற்பாறைகளைக் குடைந்து, அவற்றுள் தூண்களும், சுவர்களும், முன்மண்டபமும், கருப்பக்கிருகமும் அமைத்து, கற்கோவில்கள் கட்டப்பட்டன. இக்கோவில்களை அமைத்த வகையைப்பற்றி மகேந்திரனது மண்டகப்பட்டு குகைக்கோவிலில் உள்ள வடமொழிச் சாசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது.

“செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் முதலியன இல்லாமலே மும்மூர்த்திகளுக்கு இக்கோவில் விசித்திர சித்தன் என்னும் பேரரசனால் கட்டப்பட்டது." இதன் மூலம் விசித்திரசித்தன் என்னும் சிறப்புப் பெயருடைய மகேந்திரவர்மன், செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு கோவில் எழுப்பும் பழைய முறையை மாற்றி, கருங்கற் பாறைகளைக் குடைந்து குகைக் கோவில்களை அமைத்தான் என்பது நன்கு புலனாகும். இவ்வாறு இவன் அமைத்த குகைக் கோவில்கள், மாமண்டூர், தளவனூர், திருச்சி, பல்லாவரம் சீயமங்கலம், சித்தன்னவாசல், வல்லம், மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மேலைச்சேரி என்னும் இடங்களில் உள.

அடுத்து பட்டத்திற்கு வந்த மாமல்லனாகிய நரசிம்மவர்மன் தன் தந்தையைப் போன்று சிறந்த கலைஞன் ஆவான். இவன் மலைகளையே கோவில்களாக மாற்றினான். இவனும் இவனுக்குப் பின்னர் பட்டத்திற்கு வந்த பரமேசுவரவர்மனும் மகாபலிபுரம், சாளுவன் குப்பம் முதலிய இடங்களில் குகைக் கோவில்களையும், இரதக் கோவில்களையும் அமைத்