பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/177

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தமிழ்ப் பழமொழிகள்

175


உத்தராடத்தில் ஒரு பிள்ளையும் ஊர் ஓரத்தில் ஒரு காணியும்.

(ஊர் வாரியில் ஒரு வேலியும்.)

உத்தராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாகிறதா?

உத்தியோகத்துக்குத் தக்க ககம்.

உத்தியோகம் குதிரைக் கொம்பாய் இருக்கிறது.

உத்தியோகம் தடபுடல்; சேவிக்கிற இவர் இன்னார் இனியார் என்று இல்லை; சம்பளம் கணக்கு வழக்கு இல்லை; குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு. 4055

(குண்டை-மாடு,)

உத்தியோகம் போன ஊரில் மத்தியானம் இருக்கதே.

உத்தியோகம் புருஷ லக்ஷணம்.

உதட்டில் ஒட்டாமல் பேசுகிறான்.

..............................

.......................................................................... 4060

(பா-ம்.) நெஞ்சிலே.

உதட்டிலே புண், மாடு கறக்க முடியவில்லை.

உதட்டிலே புன்னகையும் உள்ளத்திலே எரிச்சலும்.

உதட்டிலே வாழைப்பழம் உள்ளே தள்ளுவார் உண்டோ?

உதட்டுக்குப் பால் மாறின தாசியும் மேட்டுக்குப் பால் மாறின கணக்கனும்.

உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகா. 4065

உதட்டுத் துரும்பு ஊதப் போகாது.

(பா-ம்.) போதாது.

உதட்டு வாழைப் பழத்தை உள்ளே தள்ள ஓர் ஆள் வேண்டும்.

உதடு ஒட்டாமல் பேசுகிறான்.

உதடு தேய்வதைவிட உள்ளங்கால் தேயலாம்.

(உள்ளங்காலைத் தேய விடு.)

உதடு தேன் சொரிய, உள்ளே நெஞ்சு எரிய. 4070

(பழம் சொரிய.)

உதடு வெல்லம்; உள்ளம் கள்ளம்.

உதயத்தில் வந்த மழையும் ஆஸ்தமிக்க வந்த மாப்பிள்ளையும் விடா.

உதர நிமித்தம் பகுக்குத வேஷம்.

(பஜகோவிந்தம்.)