பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/68

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

66

தமிழ்ப் பழமொழிகள்


அற முறுக்கினால் கொடி முறுக்குப் படும்.

அற முறுக்குக் கொடும்புரி கொண்டு அற்று விடும். 1500

அறவடித்த ...........சோறுகழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல்.

(பி.ம்.) காடிப் பானையில்

அறவில்............. வாணிகம்.

அறவும் கொடுங்கோலரசன் கீழ்க் குடியிருப்பிலும் குறவன் கிழ்க் குடியிருப்பு மேல்.

அறவைக்கு வாய் பெரிது; அஞ்சாறு அரிசிக்குச் கொதி பெரிது.

அறிவுக்கு அழகு அகத்து உணர்ந்து அறிதல். 1505

அறிந்த ஆண்டை என்று கும்பிடப் போனால் உங்கள் அப்பன் பத்துப்பணம் கொடுக்கவேணும் கொடு என்றான்.

அறிந்த பார்ப்பான் சிநேகிதக்காரன், ஆறு காசுக்கு மூணு தோசை-----

(பி-ம்.) அறிந்த பார்ப்பான் தோசைக்குப் போனால்.

அறிந்தவன் அறிய வேண்டும், அரியாலைப் பனாட்டை.

(யாழ்ப்பாண வழக்கு பனாட்டு-பன வெல்லத்தில் பண்ணும் தின்பண்டம் பினாட்டுத்தட்டை.)

அறிந்தவன் என்று கும்பிட அடிமை வழக்கு இட்டாற் போல.

(பி-ம்.) வழக்கு பிடித்து இட்டாற் போல.

அறிந்து அறிந்து கெட்டவர் உண்டா? 1510

அறிந்து அறிந்து செய்கிற பாவத்தை அழுது அழுது தொலைக்க வேணும்.

அறிந்து அறிந்து பாவத்தைப் பண்ணி அழுது அழுது அனுபவித்தல்.

அறிந்து கெட்டேன்; அறியாமலும் கெட்டேன்; சொறிந்தும் புண்ணாச்சு.

அறிய அறியக் கெடுவார் உண்டா?

(பி-ம்.) கெட்டவர்.

அறியாக் குளியாம் கருமாறிப் பாய்ச்சல். 1515

அறியாத ஊருக்குப் புரியாத வழி காட்டினாற் போல்.

அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள்.

அறியாப் பாவம் பறியாய்ப் போச்சு.

(பி-ம்) பொறியாய்.

அறியாப் பிள்ளை ஆனாலும் ஆடுவான் மூப்பு.

அறியாப் பிள்ளை புத்தியைப் போல. 1520

அறியாமல் தாடி வளர்த்து அம்பட்டன் கையிற் கொடுக்கவா?

அறியா விட்டால் அசலைப் பார்; தெரியா விட்டால் தெருவைப்பார்.