பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/148

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

146

தமிழ்ப் பழமொழிகள்


குருடன் வேண்டுவது கண் பெறத்தானே?

(வேண்டுவதெல்லாம் கண்தான்.)

குருடனுக்கு என்ன, கோல்தான் வேண்டும். 8940


குருடனுக்குக் கண்ணாடி காட்டின கதை.

குருடனுக்குக் கண் வேண்டுமென்றுதான் சொல்லுவான்; வேண்டாமென்று சொல்லுவானா?

குருடனுக்குக் குருடன் கோல் பிடிக்க முடியுமா?

குருடனுக்குக் குருடன் வழி காட்டினால் இருவரும் குழியில் விழுவார்கள்.

குருடனுக்குக் கோல் கொடுத்தாற் போல. 8945


குருடனுக்குக் கோல் பிடிக்க முடியுமா?

குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற் போல.

குருடனுக்குத் தொட்டால் கோபம்; முடவனுக்கு விட்டால் கோபம்.

குருடனுக்குப் பால் கொக்குப் போன்றது.

குருடனுக்குப் பால் சோறு இட்டது போல? 8950


குருடனுக்கு விட்ட இடத்தில் கோபம்.

(பகை.)

குருடனுக்கு வேண்டியது கண்.

குருடனும் செவிடனும் கூத்துப் பார்க்கப் போய்க் குருடன் கூத்தைப் பழித்தான்; செவிடன் பாட்டைப் பழித்தான்.

குருடனும் செவிடனும் கூத்துப் பார்த்தது போல.

(பார்த்த கதை.)

குருடனை நோட்டம் பார்க்கச் சொன்னாற் போல. 8955


குருடனை ராஜவிழி விழிக்கச் சொன்னால் விழிப்பானா?

குருடா சுகமா என்றாற் போல.

குருடி தண்ணீருக்குப் போனால் எட்டாள் மெனக்கீடு.

(வினைக் கேடு.)

குருடி மை இட்டாலும் குருடு குருடே.

குருடி வயிற்றிலே குஞ்சரம் பிறந்தது போல். 8960


குருடு ஆனாலும் குதிரை சிமிட்டுகிறதில் தா இல்லை

குருடு குருடு என்றால் செவிடு செவிடு என்கிறாய்.

(குடுகுடு என்கிறாய்.)