பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/120

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

116



2. மக்கள் பெயர்த் தொகுதி

மக்களினத்தில் சாதி சமயத்துறையிலும் அரசியல் துறையிலும் தொழில் துறையிலும் தகுதியளவிலும் வாழும் இடத்தைப்பொறுத்தும் எத்துணைப் பிரிவுகள் உண்டோ அத்துணைப் பிரிவுகளுக்கும் உரிய பெயர்கள் ஏறக்குறைய மக்கள் பெயர்த் தொகுதியில் கூறப்பட்டுள்ளன. ஆண்பாற் பெயர்களோடு பெண்பாற் பெயர்களும் பேசப்பட்டுள்ளன. இவற்றோடு, மக்களது உடல், உடலுறுப்புக்கள், உயிர், ஆகியவற்றின் பெயர்களும் உரைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒரு சில பெயர்களைக் காண்பாம்:–

பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கு இக் காலத்தில் ‘உபாத்தியாயர்’ என்று பெயராம். இது வடமொழிப் பெயர். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல்—(இந்த ஒப்புமை சொல்லக்கூடாதுதான்; என்ன செய்வது)—இந்த உபாத்தியாயர் என்னும் பெயரும் முழுதாய் நிலைக்காமல் ‘வாத்தியார்’ ஆகி, பின்னர் ‘வாத்தி’ என வந்து அப்படியே ஆணி அடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டது. இனி எவராலும் இந்தப் பெயரை இம்மியும் அசைக்க முடியாதுபோல் தெரிகிறது. ஆனால் அந்தக்காலத்தில் ‘கணக்காயர்’ என்னும் கருத்துச் செறிந்த பெயரால் ஆசிரியர் அழைக்கப்பட்டார்.

“கணக்காயர் நூல் உரைப்போர்.”

என்பது திவாகர நூற்பா. கணக்கு என்றால் நூல் (புத்தகம்) என்று பொருளாம். எழுதப்படிக்கத் தெரியா-