பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதல் பாகம்

தமிழ் அகராதிக் கலை வரலாறு


அகராதிக் கலை என்றதுமே, இப்படியும் ஒரு கலையா என்று வியப்புடன் கேட்கத் தோன்றும். ஆம், இஃதும் ஒரு கலைதான்! இதில் இன்னொரு வியப்பு என்னவென்றால், தமிழ் அகராதிக் கலையின் வயது மூவாயிரம் ஆண்டுக்கும் மேற்பட்டதாகும்.

பொதுவாக ஆங்கிலத்தில் ‘லெக்சிகோகிராஃபி’ (Lexicography) என அழைக்கப்படும் அகராதிக் கலை ஐரோப்பிய மொழிகளில் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளது. அத்தகு வளர்ச்சி தமிழ் மொழியிலும் நடைபெற்று வருகிறது.

அகராதி என்றால் என்ன? அகராதிக் கலை என்றால் என்ன? அதன் வரலாறு யாது? இவ்வினாக்கட்குத் தொடர்ந்து விளக்கம் காணவேண்டும்.